India’s Next Virat Kohli: இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்..? அறிமுகமாகாத இளம் வீரரை கைகாட்டிய இங்கிலாந்து வீரர்!

Virat Kohli Replacement: விராட் கோலியின் ஓய்வுக்குப் பின், இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக சாய் சுதர்சனை முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் ஆதரிக்கிறார். IPL 2025ல் அதிக ரன்கள் குவித்த சாய் சுதர்சன், இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப்பிலும் சிறப்பாக செயல்பட்டார். அவரது ஆக்ரோஷமான பேட்டிங் இந்திய அணிக்கு விராட் கோலியின் இடத்தை நிரப்ப உதவும் என பனேசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Indias Next Virat Kohli: இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்..? அறிமுகமாகாத இளம் வீரரை கைகாட்டிய இங்கிலாந்து வீரர்!

சாய் சுதர்சனுடன் சுப்மன் கில் - மான்டி பனேசர்

Published: 

09 Jun 2025 21:37 PM

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலியின் (Virat Kohli) ஓய்வுக்கு பிறகு, சுப்மன் கில் தலைமையின் கீழ் இந்திய டெஸ்ட் அணி களமிறங்குகிறது. இந்தநிலையில், அடுத்த விராட் கோலி யார் என்ற கேள்வி இந்திய கிரிக்கெட்டை சுற்றி அதிகளவில் வலம் வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணி பேட்டிங்கில் சிக்கலில் சிக்கிய போதெல்லாம் விராட் கோலி 4வது இடத்தில் களமிறங்கி மீட்டுள்ளார். எனவே, இவரது ஓய்வுக்கு பிறகு இந்த இடத்தை யார் நிரப்ப முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. சுப்மன் கில் (Shubman Gill) 4வது இடத்தில் களமிறக்கப்படலாம் என்று கூறப்பட்டாலும், முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர், அறிமுகமாகாத இளம் வீரருக்கு தனது முழு ஆதரவை கொடுத்துள்ளார்.

யார் அந்த வீரர்..?

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகல் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் சாய் சுதர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டது கவனிக்கத்தக்க ஒன்று. இவர் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டது மட்டுமின்றி, நடந்து முடிந்த ஐபிஎல் 2025 சீசனில் அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றினார். மேலும், கடந்த 2024ம் ஆண்டு கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக விளையாடி ஒரு சதத்தையும் பதிவு செய்தார். இதன்மூலம், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன் அறிமுகமானால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாய் சுதர்சனுக்கு ஆதரவாக மான்டி பனேசர்:

இதுகுறித்து இன்சைட் ஸ்போர்ட்டிடம் பேசிய மான்டி பனேசர், “ இந்திய அணியின் தற்போது சில நல்ல இளைஞர்கள் உள்ளனர். அதில், ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேன் சர்ரே வீரர் சாய் சுதர்சன். அவரது பேட்டிங் ஆக்ரோஷமாகவும், அச்சமற்றதாகவும் தெரிகிறது. இங்கிலாந்து மண்ணில் சர்ரே அணிக்காகவும் சாய் சுதர்சன் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே, சாய் சுதர்சன் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக வர முடியும், இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 4வது இடத்தில் விராட் கோலி செய்த விஷயங்களை ஏற்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

நான் சொல்ல விரும்பும் ஒரு விஷயம் விராட் கோலியின் இடத்தை முன்னெடுத்து செல்வதுதான். விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடிய விதத்தை, இளம் இந்திய டெஸ்ட் வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை நான் பார்க்க விரும்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

 

Related Stories
National Sports Policy 2025: நடைமுறைக்கு வரும் தேசிய விளையாட்டு கொள்கை.. ஒப்புதல் அளித்த பிரதமர் மோடி அமைச்சரவை..!
India vs England 2nd Test: வெற்றிக்காக 58 ஆண்டுகள் காத்திருப்பு! இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைக்குமா இந்தியா..?
Rishabh Pant: அபாயத்தில் விராட் கோலி ரெக்கார்ட்.. விரட்டி பிடிப்பாரா ரிஷப் பண்ட்..? காத்திருக்கும் 2வது டெஸ்ட்!
Ind vs Eng 2nd Test: 2வது டெஸ்டுக்கான ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து.. அணியில் ஆர்ச்சருக்கு இடமா?
பயிற்சியில் கடுமையாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர்.. 2வது டெஸ்டில் இந்திய அணியில் இடமா..?
IND vs ENG 2nd Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் பும்ரா களம்.. உறுதியாக சொன்ன இந்திய உதவி பயிற்சியாளர்!