India vs Pakistan: மீண்டும் மீண்டுமா..? செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்த பாகிஸ்தான்.. அதிருப்தியில் ஐசிசி!

Asia Cup 2025 Super 4: இந்திய வீரர்கள் கைகுலுக்கக் கூடாது என்ற முடிவை எடுத்ததை தொடர்ந்து பாகிஸ்தான் அணி கோபமாக உள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் காரணமாக, ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொள்ள வேண்டாம் என்று இந்திய அணி முடிவு செய்தபோது பாகிஸ்தானின் பிரச்சினைகள் மேலும் மோசமடைந்தன.

India vs Pakistan: மீண்டும் மீண்டுமா..? செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்த பாகிஸ்தான்.. அதிருப்தியில் ஐசிசி!

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா

Published: 

20 Sep 2025 19:43 PM

 IST

2025 ஆசியக் கோப்பையில் (Asia Cup 2025) லீக் ஸ்டேஜின்போது இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) போட்டிக்கு பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தானுடன் கைக்குலுக்கி கொள்ளவில்லை. இதனால், லீக் கட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அணிக்கு எதிரான போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்த பிறகு, இந்தியாவுக்கு எதிரான சூப்பர் ஃபோர் போட்டிக்கு முன்பும் பாகிஸ்தான் அதே செயலை மீண்டும் செய்துள்ளது. ஐசிசி (ICC) அகாடமியில் திட்டமிடப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பை பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நாளை அதாவது 2025 செப்டம்பர் 21ம் தேதி நடைபெறும் சூப்பர் 4 சுற்று போட்டி குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் புறக்கணிக்க காரணம் என்ன..?

2025 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்வது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டிக்கு முன்பும் பாகிஸ்தான் அணி அவ்வாறு செய்தனர். இப்போது, இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டிக்கு முன்பும் பாகிஸ்தான் அணி மீண்டும் டிதை செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

ALSO READ: அனைத்திற்கும் தயார்…! பாகிஸ்தான் பெயரை தவிர்த்த சூர்யகுமார் யாதவ்..!

இதற்கிடையில், நாளை அதாவது 2025 செப்டம்பர் 21ம் தேதி இந்தியாவுக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக, வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஊக்கமளிக்கும் பேச்சாளர் டாக்டர் ரஹீலை அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2025 ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியாவிடம்  பாகிஸ்தான் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதனால், பாகிஸ்தான் முகாமில் உற்சாகம் குறைவாக உள்ளது.

இந்திய வீரர்கள் கைகுலுக்கக் கூடாது என்ற முடிவை எடுத்ததை தொடர்ந்து பாகிஸ்தான் அணி கோபமாக உள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் காரணமாக, ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொள்ள வேண்டாம் என்று இந்திய அணி முடிவு செய்தபோது பாகிஸ்தானின் பிரச்சினைகள் மேலும் மோசமடைந்தன. இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் அணி கடுமையாக எதிர்கொண்டு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையில், போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் அணி இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் பிசிபி குற்றம் சாட்டியது. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போட்டியில் இருந்து விலகுவதாக மிரட்டினர். மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான 3வது லீக் ஸ்டேஜ் போட்டியில் விளையாட தாமதம் செய்தனர். இருப்பினும், ஆண்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து பிசிபி போட்டியில் விளையாட ஒப்புக்கொண்டது. மேலும், சர்ச்சை அதனுடன் முடிவடையவில்லை. தொடர்ந்து, பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் பகுதியில் ஆண்டி பைக்ராஃப்ட்டுடனான சந்திப்பை வீடியோ எடுத்து ஆன்லைனில் வெளியிடுமாறு பிசிபிக்கு ஐசிசி கடுமையான மின்னஞ்சல் அனுப்பியது.

ALSO READ: ஓமனுக்கு எதிரான போட்டியில் தலையில் காயம்.. சூப்பர் 4ல் அக்சர் படேல் களமிறங்குவாரா?

அழுத்தத்தில் பாகிஸ்தான் அணி:


இந்த மின்னஞ்சலுக்கு பதிலளிக்கும் விதமாக, இது ஐசிசி நெறிமுறைகளுக்கு உட்பட்டது என்று பிசிபி தெரிவித்துள்ளது. இந்த மைதானத்திற்கு வெளியே நடந்த விஷயம் பாகிஸ்தான் அணியின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. சல்மான் ஆகா தலைமையிலான அணி, அடுத்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட வேண்டும். இதற்கிடையில், இந்த முக்கிய போட்டியில் ஆண்டி பைக்ராஃப்ட் மீண்டும் போட்டி நடுவராக களமிறங்கவுள்ளார்.