Operation Sindoor: பஹல்காம் தாக்குதலுக்கு பழிக்கு பழி.. ஆபரேஷன் சிந்தூருக்கு திரண்டு வந்து ஆதரவளித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

Pahalgam Terror Attack: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை வான்வழி தாக்குதல் மூலம் தகர்த்தெறிந்தது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் சமூக வலைதளங்களில் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தளங்கள் இலக்காக வைக்கப்பட்டன. இந்த தாக்குதல் இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை வலியுறுத்துகிறது.

Operation Sindoor: பஹல்காம் தாக்குதலுக்கு பழிக்கு பழி.. ஆபரேஷன் சிந்தூருக்கு திரண்டு வந்து ஆதரவளித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

கவுதம் கம்பீர் - வீரேந்திர சேவாக் - சுரேஷ் ரெய்னா

Published: 

07 May 2025 11:34 AM

 IST

கடந்த 2025 ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு (Pahalgam Terror Attack), பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் காஷ்மீரில் வான்வழி தாக்குதல்கள் மூலம் இந்தியா தக்க பதிலடி கொடுத்து பழிவாங்கியது. இந்த பகுதிகளில் பதுங்கியிருந்த 9 பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” (Operation sindoor) என்ற பெயரில் தாக்குதலை தொடுத்தது. இந்த முழு தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வந்தார். சரியாக 15 நாட்களுக்கு பிறகு, பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்திய ஆயுதப்படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இவற்றில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத குழுக்கள் மீது நேரடி தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்திய ராணுவத்தினரின் இந்த தாக்குதலுக்கு பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

வீரேந்திர சேவாக்:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்:

முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீர், ஆபரேஷன் சிந்தூர் படத்தின் போஸ்டரை பதிவிட்டு, “ஜெய் ஹிந்த்” என்ற தலைப்பை கொடுத்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா:

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா  ஆபரேஷன் சிந்தூர் போஸ்டரை பதிவிட்டு “ஜெய் ஹிந்த்” என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்துள்ளார்.

பிராக்யன் ஓஜா:

ஆகாஷ் சோப்ரா:

வருண் சக்கரவர்த்தி:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியும் தனது இன்ஸ்டாகிராம் சேனலில் இந்திய ராணுவத்தால் வெளியிடப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ படத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா எப்போது தாக்குதல் நடத்திய பயங்கரவாத கும்பல் மீது தாக்குதல் நடத்தும் என்று நாடு முழுவதும் எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து, 2025 மே 7ம் தேதி இன்று அதிகாலை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்த இந்தியா, வான்வழித் தாக்குதல் மூலம் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த இந்திய ராணுவ தாக்குதலுக்கு ’ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டது . இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிடப்பட்ட ஜெய்ஷ் மற்றும் லஷ்கர் தளங்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்