Virat Kohli: 2019ல் விராட் கோலியை நீக்க திட்டம் போட்டதா ஆர்சிபி? முன்னாள் ஆல்ரவுண்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
Moeen Ali Reveals Shocking RCB Plan: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 2025 ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது. ரஜத் படிதார் தலைமையிலான அணியில் விராட் கோலியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஆனால், மொயீன் அலி, 2019ல் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க RCB திட்டமிட்டதாகவும், பார்த்திவ் படேலை கேப்டனாக நியமிக்க முயற்சித்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

விராட் கோலி - பார்த்திவ் படேல்
ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. பெங்களூரு அணி கடந்த 2008ம் ஆண்டு முதல் கோப்பையை வெல்ல எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனால், யாரும் பெங்களூரு அணிக்கு கோப்பையை வென்று தர முடியவில்லை. அப்போதுதான், ரஜத் படிதார் தலைமை வகித்து பெங்களூரு அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். இந்தநிலையில், முன்னாள் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி கடந்த 2019ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலியை (Virat Kohli) நீக்க தயாராக இருந்ததாக ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
ALSO READ: இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது..? மாத வாரியான அட்டவணை இதுதான்!
மொயீன் அலி கூறியது என்ன..?
2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய மொயீன் அலி, கடந்த 2019ம் ஆண்டு விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது குறித்து பரிசீலித்ததாகவும், அவருக்கு பதிலாக பார்த்திவ் படேலுக்கு கேப்டன் பதவி கொடுக்க இருந்ததாகவும் தெரிவித்தார். இதுகுறித்து மொயீன் அலி கூறுக்கையில், “ஆமாம், அப்படி ஒரு விஷயம் நடந்தது. ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் இருந்த கடைசி வருடம். பார்த்திவ் படேல் கேப்டன் பதவிக்கு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டார் என்றே நினைத்தோம். பார்த்திவ் படேலுக்கு அபாரமான கிரிக்கெட் அறிவு இருந்தது. அப்போது, அதுதான் பரபரப்பாக பேசப்பட்டது. என்ன நடந்தது, ஏன் நடக்கவில்லை என்று எனக்கு தெரியாது. ஆனால், அவர் தீவிரமாக பரிசீக்கப்பட்டார்” என்று தெரிவித்தார்.
விராட் கோலி கேப்டன்சி:
🗣️
Moeen Ali revealed that during Gary Kirsten’s stint with Royal Challengers Bengaluru in 2019
the franchise had contemplated replacing Virat Kohli as captain Parthiv Patel was seriously considered for the role due to his cricketing acumen,but the plan never went ahead-News18 pic.twitter.com/SMkcSBZ1Wx
— 𝐂𝐇𝐀𝐑𝐀𝐍~𝟕💛 (@UrSuperking7) July 28, 2025
கடந்த 2013ம் ஆண்டு முன்னாள் நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரியிடமிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்றுகொண்டார். அதன்படி, கடந்த 2013ம் ஆண்டு முதல் 2021 வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டனாக கோலி இருந்தார். இந்த காலக்கட்டத்தில் கோலி தனது கேப்டன்சி மூலம் பெங்களூரு அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று தரவில்லை என்ற விமர்சனங்களை எதிர்கொண்டார்.
கடந்த 2016ம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். இதை தவிர, ஐபிஎல்லில் கேப்டனாக கோலி ஒட்டுமொத்த சாதனையும் ஏமாற்றம் அளித்தது. இதனை தொடர்ந்து, கோலியின் தலைமை தொடர்ச்சியாக விமர்சனத்திற்குள்ளானது.
ALSO READ: 19 வயதில் மகளிர் செஸ் உலகக் கோப்பை சாம்பியன்.. வரலாறு படைத்த திவ்யா தேஷ்முக்..!
2020ம் ஆண்டில் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் சைமன் கட்டிச் ஜோடி அணியை பிளே ஆஃப்களுக்கு அழைத்து சென்றது. இதன்பிறகு, 2021ம் ஆண்டில் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார். கோலி விலகியதற்கு பணிச்சுமையே காரணம் என்று கூறப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு முதல் ஃபாஃப் டு பிளெசிஸ் கேப்டனானார். 2025ம் ஆண்டில் ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. கடந்த 2025 சீசனில் விராட் கோலி 15 போட்டிகளில் 657 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.