IPL 2026: KKRக்கு எதிராக பும்ரா விளையாடுவாரா? பயிற்சியாளர் ஜெயவர்தனே முக்கிய தகவல்!

Jasprit Bumrah: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த மற்ற மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அனைவரும் அந்த அணியில் இணைந்த நிலையில், பும்ரா மட்டும் இடம்பெறவில்லை. கடந்த 2026 மார்ச் 3வது வாரம் பும்ரா பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் இருந்ததால், அவருக்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்தன.

IPL 2026: KKRக்கு எதிராக பும்ரா விளையாடுவாரா? பயிற்சியாளர் ஜெயவர்தனே முக்கிய தகவல்!

பும்ரா

Published: 

29 Mar 2026 17:40 PM

 IST

இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) 2026 சீசனின் 2வது போட்டியில் இன்று அதாவது 2026 மார்ச் 29ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக பும்ரா விளையாடுவாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. இந்தநிலையில், ஜஸ்பிரித் பும்ரா விளையாடத் தயாராக உள்ளார் என்றும், அவருக்குக் காயம் குறித்த எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனே உறுதிப்படுத்தியுள்ளார். இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பும்ராவின் பந்துவீச்சை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ALSO READ: காயத்தால் தவிப்பு? பயிற்சி மேற்கொள்ளாத பும்ரா.. அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியின்போது, மார்ச் மாதத்தின் 3வது வாரத்தில் பும்ரா பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸுக்கு (CoE) சென்றதால், காயம் தொடர்பான பிரச்சனை என்று கூறப்பட்டு வந்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவாரா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்தன. 2026 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றிருந்தார். மேலும், இந்தியா அணி கோப்பையை வெல்ல பும்ரா முக்கிய காரணமாகவும் இருந்தார்.

ALSO READ:

பும்ரா வருகை தாமதம்:

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த மற்ற மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அனைவரும் அந்த அணியில் இணைந்த நிலையில், பும்ரா மட்டும் இடம்பெறவில்லை. கடந்த 2026 மார்ச் 3வது வாரம் பும்ரா பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் இருந்ததால், அவருக்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்தன. இருப்பினும், பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துவிட்டதாகவும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பங்கேற்பார் என்றும் ஜெயவர்தனே உறுதிப்படுத்தியுள்ளார்.

வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி மோதும் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெயவர்தனே, “ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்துவிட்டார். அவர் விளையாடத் தயாராக இருக்கிறார். அவ்வளவுதான்” என்று கூறினார்.

ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 18 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

மிட்செல் சான்ட்னர், வில் ஜாக்ஸ் இன்னும் இணையவில்லை:

நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் மற்றும் இங்கிலாந்து நட்சத்திர வீரர் வில் ஜாக்ஸ் ஆகியோர் இன்னும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையவில்லை. இதனால், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்காக, சீசனின் தொடக்கத்தில் 2 வெளிநாட்டு வீரர்களும் சில போட்டிகளைத் தவறவிட வாய்ப்புள்ளது. சான்ட்னர் மற்றும் ஜாக்ஸ் இருவரும் 2026 டி20 உலகக் கோப்பையில் தத்தமது நாட்டின் தேசிய அணிகளில் இடம்பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து, அணி நிர்வாகம் அவர்களுக்கு நீண்ட ஓய்வை அளித்துள்ளது.

ALSO READ: RCBக்கு எதிராக ஆக்ரோஷ பேட்டிங்.. 3 வயதில் தாயை இழந்த சோகம்.. யார் இந்த அனிகேத் வர்மா?

வில் ஜாக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, 2026 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவிடம் தோல்வியடைந்தது. அதே சமயம், சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோற்றது. அவர்கள் இருவரும் இந்தியாவிலிருந்து தாமதமாகப் புறப்பட்டதால், மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களுக்கு நீண்ட ஓய்வு அளித்துள்ளது. இதன் காரணமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டத்தில் இந்த இருவரும் பங்கேற்க மாட்டார்கள்.

 

Follow Us
ரயில்வே கேட்டரிங்கு 10 லட்சம் அபராதம் .. ரயில்வே அதிரடி..
ஹோர்முஸ் கடல் பாதை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல அனுமதி - ஈரான் அறிவிப்பு
மெட்டா மற்றும் கூகுள் எதிராக பெண் தொடர்ந்த வழக்கு.. 6 மில்லியன் டாலர் பெண்ணுக்கு வழங்க உத்தரவு..
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு