IPL 2026: ஐபிஎல்லில் இந்த 5 வெளிநாட்டு வீரர்கள்.. சில போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள்..!
IPL Mini Auction 2026: ஆஸ்திரேலியாவின் 30 வயதான ஜோஷ் இங்கிலிஸ் தற்போது காபாவில் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்டில் விளையாடி வருகிறார். இவர் ஐபிஎல் 2026 சீசனில் 25 சதவீத போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். ஜோஷ் இங்கிலிஸ் தனது அடிப்படை விலையாக ரூ. 2 கோடியை பதிவு செய்துள்ளார்.

ஐபிஎல் மினி ஏலம் 2026
ஐபிஎல் (IPL) ஏலமானது வருகின்ற 2025 டிசம்பர் 16ம் தேதி அபுதாபியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. அதன்படி, எந்தெந்த வீரர்களை எந்தெந்த அணிகள் எடுக்க போகிறது என்ற ஆவல் இப்போது ரசிகர்கள் மனதில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்தநிலையில், ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்த 1,355 வீரர்களில் 5 வெளிநாட்டு வீரர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) ஐபிஎல் 2026ல் குறைந்த எண்ணிக்கையிலான போட்டிகளில்தான் விளையாடுவோம் என்று தெரிவித்துள்ளனர். அதன்படி, ஆஸ்திரேலியாவின் ஆஷ்டன் அகர் 65 சதவீதமும், வில்லியம் சதர்லேண்ட் 80 சதவீதமும், நியூசிலாந்தின் ஆடம் மில்னே 95 சதவீதமும், தென்னாப்பிரிக்காவில் ரிலே ரோசோவ் 20 சதவீதம் என இந்த 2026 சீசனில் விளையாடுவதற்கான வாய்ப்புகளை தெரிவித்தனர்.
ALSO READ: ஐபிஎல் ஆட்டம் இனி இல்லை – ஓய்வை அறிவித்த ஆண்ட்ரே ரஸ்ஸல்.!
இதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியாவின் 30 வயதான ஜோஷ் இங்கிலிஸ் தற்போது காபாவில் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்டில் விளையாடி வருகிறார். இவர் ஐபிஎல் 2026 சீசனில் 25 சதவீத போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். ஜோஷ் இங்கிலிஸ் தனது அடிப்படை விலையாக ரூ. 2 கோடியை பதிவு செய்துள்ளார். கடந்த 2025 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஜோஷ் இங்கிலிஸ் 11 போட்டிகளில் விளையாடி 278 ரன்கள் எடுத்தார். குவாலிஃபையர் 2ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக ஒரு ஓவரில் 20 ரன்கள் அடித்து பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார்.
இந்த வீரர்களின் அடிப்படை விலை என்ன..?
ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஆஷ்டன் அகர் அடிப்படை விலையாக ரூ. 2 கோடியை நிர்ணயித்துள்ளார். இவர் ஒருபோதும் ஐபிஎல்லில் விளையாடிய அனுபவம் கிடையாது. அதேபோல், சதர்லேண்டும் அடிப்படை விலையாக ரூ. 1 கோடியை நிர்ணயித்துள்ளார். இவரும் ஐபிஎல்லில் விளையாடியது கிடையாது. நியூசிலாந்தின் மில்னே இதற்கு முன்பு ஐபிஎல்லில் விளையாடியுள்ளார். ஆனால், கடந்த 3 சீசன்களாக விளையாடவில்லை. இவரும் தனது விலையை ரூ. 2 கோடியாக நிர்ணயித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் ரிலே ரோசோவ் கடந்த 2014ம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமானதிலிருந்து அவ்வப்போது மட்டுமே விளையாடி வருகிறார். கடந்த 4 சீசன்களில் மொத்தமாகவே 22 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். எனவே, ரோசோவை எந்த அணியும் எடுக்க பெரிதாக விரும்பாது.
14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பு:
ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், அயர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த 43 வெளிநாட்டு வீரர்கள் தங்களது பதிவு செய்துள்ளனர்.