IPL 2026: சிஎஸ்கேவில் ஆயுஷ் மத்ரேவுக்கு பதிலாக யார் வருவார்? போட்டியில் இந்த 3 வீரர்கள்!
Ayush Mhatre Replacement: ஐபிஎல் 2026 சீசனில் ஆயுஷ் மத்ரே இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 33.50 சராசரி மற்றும் 177.87 ஸ்டிரைக் ரேட் மற்றும் 2 அரைசதங்களுடன் 201 ரன்கள் எடுத்தார். இதில் 12 சிக்ஸர்களும் 20 பவுண்டரிகளும் அடங்கும். இருப்பினும், ஹைதராபாத் அணிக்கு எதிராக பேட்டிங் செய்தபோது தொடை தசைநாரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆயுஷ் மத்ரே தற்போது இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஆயுஷ் மத்ரே
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு காயம் காரணமாக அடுத்தடுத்து சிக்கல்களை எதிர்கொண்டது. முன்னதாக, ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, சிஎஸ்கே முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி முதல் 3 வாரங்களுக்கு விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, நாதன் எல்லீஸின் காயம், ஸ்பென்சர் ஜான்சனின் வருகை தாமதம் மற்றும் கலீல் அகமது விலகல் போன்றவை சிஎஸ்கேவுக்கு சிக்கலை கொடுத்துள்ளது. இந்தநிலையில், ஆயுஷ் மத்ரேவின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த வலது கை பேட்ஸ்மேனா ஆயுஷ் மத்ரே, இந்த 2026 சீசனின் ஐபிஎல் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். சிறப்பான ஃபார்மில் இருந்த ஆயுஷ் மத்ரே (Ayush Mhatre) இல்லாதது சிஎஸ்கே அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாகும்.
ALSO READ: தூரமாய் சென்ற பந்து.. பாய்ந்து பறந்து ஸ்டம்பிங் செய்த துருவ் ஜூரெல்.. வைரலாகும் வீடியோ!
ஐபிஎல் 2026 சீசனில் ஆயுஷ் மத்ரே இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 33.50 சராசரி மற்றும் 177.87 ஸ்டிரைக் ரேட் மற்றும் 2 அரைசதங்களுடன் 201 ரன்கள் எடுத்தார். இதில் 12 சிக்ஸர்களும் 20 பவுண்டரிகளும் அடங்கும். இருப்பினும், ஹைதராபாத் அணிக்கு எதிராக பேட்டிங் செய்தபோது தொடை தசைநாரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆயுஷ் மத்ரே தற்போது இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் இடம்பெறுவார் என்பதே இப்போது பெரிய கேள்வியாக உள்ளது. இந்தநிலையில், ஆயுஷ் மத்ரேவுக்கு பதிலாக யார் களமிறங்க வாய்ப்புள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.
யாஷ் துல்:
டெல்லி பேட்ஸ்மேனும், முன்னாள் அண்டர் 19 கேப்டனுமான யாஷ் துல், ஆயுஷ் மத்ரேவுக்குப் பதிலாக அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. வலது கை பேட்ஸ்மேனான யாஷ் துல், சமீபகாலமாக நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார். டெல்லி பிரீமியர் லீக்கில் 167-க்கும் மேற்பட்ட சராசரியில் 435 ரன்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து, டெல்லி அணிக்காக ரஞ்சி டிராபியில் 5 போட்டிகளில் விளையாடி 434 ரன்கள் எடுத்துள்ளார்.
ஸ்வஸ்திக் சிகாரா:
ஆயுஷ் மத்ரேவுக்குப் பதிலாக ஸ்வஸ்திக் சிகாராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாய்ப்பளிக்கலாம். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்வஸ்திக் சிகாரா ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். ஸ்வஸ்திக் சிகாரா கடந்த 2025 சீசனில் ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் நடந்த அயோத்தியா பிரீமியர் லீக் போட்டியில் ஸ்வஸ்திக் சிகாரா 69 பந்துகளில் 195 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் மட்டும் சிகாரா 21 சிக்ஸர்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: ஐபிஎல் 2026ல் ஆயுஷ் மத்ரேவும் அவுட்.. காயத்தால் சிக்கி தவிக்கும் சிஎஸ்கே..!
அனுபவ வீரர் வேண்டுமா..?
சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு அனுபவமிக்க வீரருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்தால், கர்நாடகாவின் அனுபவ பேட்ஸ்மேனான மயங்க் அகர்வால் ஒரு சிறந்த தேர்வாக இருப்பார். வலது கை பேட்ஸ்மேன் 131 ஐபிஎல் போட்டிகளில் 13 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 2,756 ரன்கள் எடுத்துள்ளார்.