IPL 2026: ஐபிஎல் 2026 டிக்கெட்டுகளை எங்கே, எப்படி முன்பதிவு செய்யலாம்? விவரங்களை தெரிந்து கொள்வோம்!
IPL 2026 Ticket Booking: ஐபிஎல் 2026 முதல் போட்டி பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும். இருப்பினும், பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுமா என்பது குறித்து நாளை அதாவது 2026 மார்ச் 13ம் தேதி தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2026 டிக்கெட் விற்பனை
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நேற்று அதாவது 2026 மார்ச் 1ம் தேதி ஐபிஎல் 2026 (IPL 2026) அட்டவணையை வெளியிட்டது. அதன்படி, வருகின்ற 2026 மார்ச் 28 ம் தேதி தொடங்கும் போட்டியின் முதல் கட்ட அட்டவணை வெளியானது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதும் போட்டி உள்பட 20 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளது. விளையாடும் 10 அணிகளும் கிட்டதட்ட முதல் கட்ட அட்டவணையில் 3 முதல் 4 போட்டிகளில் விளையாட இருக்கின்றன. அந்தவகையில், ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் எப்போது, எங்கே, எப்படி போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை எப்போது வெளியிடப்படும்? பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அப்டேட்!
ஐபிஎல் 2026 டிக்கெட் தகவல்:
வரவிருக்கும் ஐபிஎல் 2026 சீசனுக்கான டிக்கெட்டுகள் விற்பனை குறித்து பிசிசிஐ எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இருப்பினும், ஜொமாடோவின் (District by Zomato) இந்தியன் பிரீமியர் லீக் டிக்கெட்டுகளுக்கான பிரத்யேக பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் விரைவில் டிக்கெட் விற்பனை நடைபெறும் என்று எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கப்படலாம் என்பது தெரிகிறது.
போட்டிகளுக்கான முன்பதிவு தொடங்குகிறது?
BookMyShow போட்டி டிக்கெட்டுகளுக்கான முன் விற்பனை பதிவுகளைத் திறந்துள்ளது. இந்த முன் விற்பனையில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கான விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் மற்றும் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இருப்பினும், முன் பதிவு டிக்கெட்டுகள் எப்போது தொடங்கும் என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை. ஆனால் முன்கூட்டியே டிக்கெட்டுகளை வாங்குவதற்கான வாய்ப்பை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் முதல் போட்டி:
முதற்கட்ட அட்டவணையின்படி, ஐபிஎல் 2026 முதல் போட்டி பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும். இருப்பினும், பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுமா என்பது குறித்து நாளை அதாவது 2026 மார்ச் 13ம் தேதி தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: சிஎஸ்கேவுக்கு பீல்டிங் கோச்சாக வருகிறாரா ரெய்னா..? சிஎஸ்கே கொடுத்த அப்டேட்!
பெங்களூருவில் நடைபெறும் போட்டிகள் கர்நாடக அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டவை என்று அட்டவணையை அறிவிக்கும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை அதாவது 2026 மார்ச் 13ம் தேதி, குழு ஒரு கூட்டத்தை நடத்தி, போட்டிகளை நடத்தும் திறன் மைதானத்திற்கு உள்ளதா என்பதை தீர்மானிக்க மைதானத்தை மதிப்பீடு செய்யும்.