IPL 2026: அறிமுகமான முதல் பந்திலேயே சிக்ஸர்.. ஐபிஎல்லில் படைக்கப்பட்ட அரிய சாதனை..!

Batsman First Ball Six in IPL: டி20 கிரிக்கெட் என்பது நொடிப்பொழுதில் மாறக்கூடிய ஒரு விளையாட்டு. இந்த லீக்கில் 30 பந்துகளில் சதம் அடித்த வரலாறும் உண்டும். கிறிஸ் கெய்ல் இத்தகைய சாதனையை படைத்தார். ஐபிஎல்-லில் சாத்தியமற்றதாகத் தோன்றும் பல சாதனைகளும் உள்ளன. தங்களது ஐபிஎல் வாழ்க்கையின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த வீரர்களை பற்றி அறிந்து கொள்வோம். 

IPL 2026: அறிமுகமான முதல் பந்திலேயே சிக்ஸர்.. ஐபிஎல்லில் படைக்கப்பட்ட அரிய சாதனை..!

ஐபிஎல் வரலாற்றில் முதல் பந்தில் சிக்ஸ்

Published: 

22 Mar 2026 15:33 PM

 IST

இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) என்பது எப்போது விறுவிறுப்புக்குப் பெயர் போனது. கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தாலும், ஒரு சீசனிலும் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டியது கிடையாது. கடந்த 2024 மற்றும் 2025 சீசன்களில் சில சமயங்களில் ஒரு அணி 250 ரன்கள் எடுக்கும், மற்ற அணிகளுக்கு 70-80 ரன்கள் எடுப்பதே கடினமாக இருக்கும். டி20 கிரிக்கெட் என்பது நொடிப்பொழுதில் மாறக்கூடிய ஒரு விளையாட்டு. இந்த லீக்கில் 30 பந்துகளில் சதம் அடித்த வரலாறும் உண்டும். கிறிஸ் கெய்ல் (Chris Gayle) இத்தகைய சாதனையை படைத்தார். ஐபிஎல்-லில் சாத்தியமற்றதாகத் தோன்றும் பல சாதனைகளும் உள்ளன. தங்களது ஐபிஎல் வாழ்க்கையின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த வீரர்களை பற்றி அறிந்து கொள்வோம்.

ALSO READ: ஐபிஎல்லில் இதுதான் என்னுடைய இலக்கு.. வைபவ் சூர்யவன்ஷி ஓபன் டாக்!

ஐபிஎல் வாழ்க்கையின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த வீரர்கள்:

ராப் குவினி

ஆஸ்திரேலிய வீரரான ராப் குவினி, 2009-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியபோது, ​​தனது ஐபிஎல் வாழ்க்கையின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார்.

கேவன் கூப்பர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய கேவன் கூப்பர், 2012ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியபோது தனது ஐபிஎல் வாழ்க்கையின் முதல் பந்திலேயே ஒரு சிக்ஸரை அடித்தார்.

ஆண்ட்ரே ரஸ்ஸல்

2012-ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியபோது, ​​ஆண்ட்ரே ரஸ்ஸல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஒரு போட்டியில்,  தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் பந்திலேயே ஒரு சிக்ஸரை அடித்தார்.

கார்லோஸ் பிராத்வைட்

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரரான கார்லோஸ் பிராத்வைட், 2016-ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணிக்காக விளையாடியபோது, ​​தனது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார்.

அனிகேத் சௌத்ரி

அனிகேத் சௌத்ரியின் ஐபிஎல்லில் நீண்ட நாட்கள் விளையாடவில்லை. கடந்த 2017 சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடியபோது, ​​அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் பந்தையே சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.

ஜாவோன் சியர்லஸ்

ஜாவோன் சியர்லஸ் தனது ஐபிஎல் வாழ்க்கையில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 2018-ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில், ஜாவோன் சியர்லஸ் தனது முதல் பந்திலேயே ஒரு சிக்ஸரை அடித்தார்.

மகேஷ் தீக்ஷனா

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா 2022-ல் ஆர்சிபி அணிக்கு எதிராக அறிமுகமானார். ஹர்ஷல் பட்டேலை எதிர்கொண்ட தீக்ஷனா, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் பந்திலேயே ஒரு சிக்ஸரை அடித்தார்.

சித்தேஷ் லாட்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சித்தேஷ் லாட், தனது ஐபிஎல் வாழ்க்கையில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 2019-ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில், சித்தேஷ் லாட் முதல் பந்திலேயே ஒரு சிக்ஸரை அடித்தார்.

சமீர் ரிஸ்வி

ஐபிஎல் 2024 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சமீர் ரிஸ்வி அறிமுகமானார். ரிஸ்வி ஆப்கானிஸ்தான் ஜாம்பவான் ரஷித் கானின் முதல் பந்திலேயே ஒரு சிக்ஸரை அடித்தார்.

ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் அதிக அணிகளுக்காக விளையாடிய 5 வீரர்கள்.. முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் முதலிடம்!

வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் 2025 தொடரில் அனுபவ பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து வைபவ் சூர்யவன்ஷி தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கினார். ஐபிஎல் வரலாற்றில் இவ்வாறு செய்த இளம் பந்துவீச்சாளர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றார்.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்