IPL 2026: சரவெடியாய் வெடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. 228 ரன்கள் குவித்தும் ராஜஸ்தான் தோல்வி!

RR vs SRH Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 25ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைபவ் சூர்யவன்ஷியின் சதத்தின் உதவியால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 

IPL 2026: சரவெடியாய் வெடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. 228 ரன்கள் குவித்தும் ராஜஸ்தான் தோல்வி!

அபிஷேக் சர்மா - இஷான் கிஷன்

Updated On: 

25 Apr 2026 23:42 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 ஏப்ரல் 25ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணி வைபவ் சூர்யவன்ஷியின் சதத்தின் உதவியால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த சீசனில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராயல்ஸ் அணி விளையாடிய முதல் போட்டி இதுவாகும். ஆனால், அவர்களால் இந்த மிகப்பெரிய இலக்கைக் கூட வெற்றிகரமாக தற்காத்துகொள்ள முடியவில்லை.

ALSO READ: ஷ்ரேயாஸ் விடுவிப்பு! கேகேஆர் செய்தது பெரிய தவறு.. ஒப்புகொண்ட முன்னாள் பயிற்சியாளர்!

நான்காவது தொடர்ச்சியான வெற்றி:

ஐபிஎல் 2026 தொடரில் ஹைதராபாத்தின் நான்காவது தொடர்ச்சியான வெற்றியாகும், அதே நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தனது ஆறாவது தொடர்ச்சியான தோல்வியை சந்தித்தது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வைபவ் சூர்யவன்ஷியின் 103 ரன்கள் சதத்தின் உதவியுடன் 228 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய ஹைதராபாத் அணி, 229 ரன்கள் எடுத்தது, இது ஐபிஎல் தொடரில் அவர்களின் இரண்டாவது அதிகபட்ச ரன் சேஸிங்காகும்.

1119 நாட்களுக்குப் பிறகும் வெற்றி இல்லை

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 1,119 நாட்களாகியும் தோற்கடிக்க முடியவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கடைசி வெற்றி 2023 ஏப்ரல் 2 அன்று கிடைத்தது. அந்தப் போட்டி நடந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் ராஜஸ்தானின் தொடர் தோல்விகள் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படவில்லை. இந்தக் காலகட்டத்தில், ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக ஆறு முறை ராஜஸ்தானைத் தோற்கடித்துள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி சதம் வீண்:

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இன்னிங்ஸை இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடங்கி வைத்தார். அவர் வெறும் 37 பந்துகளில் 103 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடினார். இந்த இன்னிங்ஸில் அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களை அடித்தார்.அவரது ஸ்டிரைக் ரேட் 278.37 ஆக இருந்தது. துருவ் ஜூரல் 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். டோனோவன் ஃபெரெய்ராவும் 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்தார். இருப்பினும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது.

ALSO READ: 265 ரன்கள் இலக்கும் அசால்ட்.. மிகப்பெரிய டார்க்கெட்டை சேஸ் செய்த பஞ்சாப்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் சேஸிங் ஆக்ரோஷமாக இருந்தது. இஷான் கிஷன் 31 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினார். அபிஷேக் ஷர்மாவும் 29 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இரண்டாவது விக்கெட்டுக்கான அவர்களின் 100 ரன் பார்ட்னர்ஷிப், போட்டியின் போக்கை நிர்ணயித்தது. பின்னர் நிதிஷ் குமார் ரெட்டி 18 பந்துகளில் 36 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 29 ரன்களும் எடுத்ததன் மூலம், ஹைதராபாத் அணி வெறும் 18.3 ஓவர்களில் இந்த மாபெரும் ஸ்கோரை எட்டியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பிரிஜேஷ் ஷர்மா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் எளிதாக போட்டியை வென்றனர்.

Follow Us
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்