IPL 2026: ராஜஸ்தான் கேப்டனாக களமிறங்கிய ஜெய்ஸ்வால்.. ரியான் பராக்கிற்கு என்ன ஆனது..?
RR Captain Yashasvi Jaiswal: குஜராத்துக்கு எதிரான டாஸின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஏன் விளையாடவில்லை என்பதை கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளக்கினார். அதில், “ முந்தைய போட்டியில் ரியான் பராக்கிற்கு தொடைத்தசைப் பகுதியில் காயம் ஏற்பட்டதால், அவரால் அணியின் ஆடும் லெவனில் இடம்பெற முடியவில்லை. விரைவில் அணிக்கு திரும்புவார்” என்று தெரிவித்தார்.

ராஜஸ்தான் கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) பாதியிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி தனது கேப்டனை திடீரென மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. செய்துள்ளது. ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 மே 9ம் தேதி 52வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான ஆடும் லெவனில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் நீக்கப்பட்டார். இதையடுத்து, ரியான் பராக்கிற்குப் பதிலாக, இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கேப்டனாக டாஸ் போடுவதற்காகக் களமிறங்கினார். இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தவகையில், ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் ஏற்பட்ட இந்தத் திடீர் மாற்றத்திற்கான காரணங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: ஊக்கமருந்து சோதனையை மேற்கொள்ளாத ஜெய்ஸ்வால்.. நோட்டீஸ் அனுப்பிய NADA! விளையாட தடையா?
ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக்கை ஏன் அணியில் சேர்க்கவில்லை?
Update for #RRvGT: Yashasvi Jaiswal will lead us tonight with Riyan still healing from a minor hamstring strain.
Be back soon, Riyan and go well, Yash 💗 pic.twitter.com/LrTrGuKv8t
— Rajasthan Royals (@rajasthanroyals) May 9, 2026
குஜராத்துக்கு எதிரான டாஸின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஏன் விளையாடவில்லை என்பதை கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளக்கினார். அதில், “ முந்தைய போட்டியில் ரியான் பராக்கிற்கு தொடைத்தசைப் பகுதியில் காயம் ஏற்பட்டதால், அவரால் அணியின் ஆடும் லெவனில் இடம்பெற முடியவில்லை. விரைவில் அணிக்கு திரும்புவார்” என்று தெரிவித்தார். இருப்பினும், அவர் மீண்டும் களத்திற்குத் திரும்புவதற்கு எத்தனை போட்டிகள் ஆகும் என்றும், காயத்தின் தீவிரம் குறித்த எந்த விவரங்களையும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ALSO READ: பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துகொண்ட KKR.. புள்ளிப் பட்டியலில் முதலிடம் யார்?
ரியான் பராக் மோசமான ஃபார்ம்:
ஐபிஎல் 2026 சீசனில் ரியான் பராக் மோசமான ஃபார்மில் தடுமாறி வருகிறார். பராக் 10 போட்டிகளில் விளையாடி, 10 இன்னிங்ஸ்களில் 23 என்ற சராசரியில் வெறும் 207 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த 10 இன்னிங்ஸ்களில் பராக் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ரியான் பராக் இதுவரை 94 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 82 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து, பராக் சராசரி மற்றும் 142.06 ஸ்டிரைக் ரேட்டில் 8 அரைசதங்களுடன் 1773 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 95 ஆகும். ரியான் பராக் 2019 முதல் ஐபிஎல்-லில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை, அவர் ராஜஸ்தான் அணியில் மட்டுமே அங்கம் வகித்துள்ளார்.