IPL 2026: காயத்துடன் க்ருனால் செய்த சம்பவம்.. மும்பையை வீழ்த்திய பெங்களூரு..!
RCB vs MI Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 மே 10ம் தேதி ராய்ப்பூரில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

க்ருனால் பாண்ட்யா
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 10ம் தேதி ராய்ப்பூரில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி பந்து வரை எந்த அணி வெற்றிபெறும் என்பதை தீர்மானிக்க முடியாததால் பரபரப்பான சூழல் நிலவியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி ஐபிஎல் 2026 தொடரிலிருந்து வெளியேறியது.
ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம்.. ஜெய்ஸ்வால் சாதனையை சமன் செய்த உர்வில் படேல்!
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. வெறும் மூன்று ஓவர்களுக்குள் ரோஹித் சர்மா உள்பட 3 விக்கெட்டுகளை இழந்தது. சிறப்பாக பந்துவீசி புவனேஷ்வர்குமார் அசத்தினார். முதலில் புவனேஷ்வர்குமார் ரியான் ரிக்கல்டனை வெளியேறி, அடுத்தடுத்த பந்துகளில் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். ரோஹித் வெறும் 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, நமன் தீர் மற்றும் திலக் வர்மா இணைந்து 82 ரன்கள் என்ற வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்து, அணியை 100 ரன்களைக் கடக்கச் செய்தனர்.
அரைசதத்தை தவறவிட்ட நமன் தீர்:
அரைசதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நமன் தீர் 32 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் திலக் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். திலக் களத்தில் இருந்தவரை, மும்பை ஒரு பெரிய ஸ்கோரை எட்டும் என்பது உறுதியாகத் தெரிந்தது. இருப்பினும், 18வது ஓவரில் புவனேஷ்வர் திலக்கை ஆட்டமிழக்கச் செய்தார., மேலும் மும்பையால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் பந்தில் கோலி மீண்டும் அவுட்:
ஆனால் பெங்களூருவின் நிலையும் வித்தியாசமாக இருக்கவில்லை; தீபக் சாஹரின் பந்துவீச்சால், பவர்பிளேக்குள்ளேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது. தனது முதல் ஓவரிலேயே, தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் ரன் கணக்கைத் தொடங்கத் தவறிய விராட் கோலியை சாஹர் ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் அவர் தேவ்தத் படிக்கலை ஆட்டமிழக்கச் செய்ய, கார்பின் பாஷ் கேப்டன் ரஜத் பதிதாரின் முக்கியமான விக்கெட்டைக் கைப்பற்றினார். அதன்பிறகு, க்ருணால் பாண்டியா மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் இணைந்து 55 ரன்கள் சேர்த்தனர்.
ALSO READ: கடைசி நேரத்தில் பயம் காட்டிய லக்னோ.. 209 ரன்கள் இலக்கை விரட்டி சிஎஸ்கே வெற்றி!
பெத்தேல் ஆட்டமிழந்த பிறகும், க்ருணால் நிதானத்தைக் கடைப்பிடித்து, வெறும் 32 பந்துகளில் அரைசதம் அடித்து அணியை ஆட்டத்தில் தக்கவைத்துக் கொண்டார். இதற்கிடையில், களமிறங்கிய ஜிதேஷ் ஷர்மா, 3 பவுண்டரிகளை அடித்து ஸ்கோரை வேகப்படுத்த உதவியதன் மூலம், ஒரு சிறிய ஆனால் முக்கியமான பங்களிப்பைச் செய்தார். இருப்பினும், கடைசி நேரத்தில் இவர்களது விக்கெட்கள் விழ, 19.4வது பந்தில் புவனேஷ்வர்குமார் குமார் சிக்ஸர் அடிக்க, கடைசி தேவையான 2 ரன்களை ரசிக் சலாம் ஓடி எடுக்க 167 ரன்களை எட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது.