IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம்.. ஜெய்ஸ்வால் சாதனையை சமன் செய்த உர்வில் படேல்!
Urvil Patel Fastest Fifty: ஐபிஎல் வரலாற்றில் 16 பந்துகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அரைசதம் அடித்திருந்த முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த சாதனையையும் உர்வில் படேல் படைத்தார்.
இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் (IPL 2026) அதிவேக அரைசதம் அடித்து உர்வில் படேல் வரலாறு படைத்துள்ளார். சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று அதாவது 2026 மே 10ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (Chennai Super Kings) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் 208 ரன்கள் எடுத்தது. 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 13 பந்துகளில் அரைசதம் அடித்த உர்வில் படேல், அதிவேக அரைசதத்திற்கான யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சாதனையை சமன் செய்தார். உர்வில் தனது இன்னிங்ஸின் முதல் எட்டு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை அடித்தார். இருப்பினும், 12 பந்துகளில் அரைசதம் அடித்த யுவராஜ் சிங்கின் சாதனையை கடைசி நேரத்தில் தவறவிட்டார்.
ALSO READ: ஐபிஎல்லில் இனி இதை செய்ய தடை.. வீரர்களுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை!




ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம்:
Witnessed Urvil Carnage 🔥🦁#WhistlePodu #CSKvLSG pic.twitter.com/dazNe1kHWc
— Chennai Super Kings (@ChennaiIPL) May 10, 2026
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் உர்வில் படேல் வெறும் 8 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தார். இதன்மூலம், 12 பந்துகளில் அரைசதம் அடித்த யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடிப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. இதற்கிடையில், பவர்பிளேக்குப் பிறகு ஒரு வியூக இடைவேளை கோரப்பட்டது, இது படேலின் வேகத்தைக் குறைந்து, தனது அடுத்த எட்டு ரன்களை எடுக்க ஐந்து பந்துகளை எடுத்துக்கொண்டார். இருப்பினும், உர்வில் படேல் ஐபிஎல்-இன் அதிவேக அரைசதத்தை தவறவிடவில்லை. அவர் 13 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டுவதற்குள் 6 சிக்ஸர்களை அடித்திருந்தார்.
- 13 பந்துகள் – உர்வில் படேல் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
- 13 பந்துகள் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
- 14 பந்துகள் – கே.எல். ராகுல் (பஞ்சாப் கிங்ஸ்)
- 14 பந்துகள் – பேட் கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
- 14 பந்துகள் – ரொமாரியோ ஷெப்பர்ட் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
- 15 பந்துகள் – யூசுப் பதான் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
ALSO READ: பயிற்சியில் தோனி.. LSG எதிரான போட்டியில் விளையாடாதது ஏன்..?
சிஎஸ்கே-யின் அதிவேக 50 ரன்கள்:
இதன் மூலம், 16 பந்துகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அரைசதம் அடித்திருந்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த சாதனையையும் உர்வில் படேல் படைத்தார்.
- 13 பந்துகள் – உர்வில் படேல்
- 16 பந்துகள் – சுரேஷ் ரெய்னா
- 19 பந்துகள் – மொயீன் அலி
தொடர்ந்து, அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட உர்வில் படேல் 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உதவியுடன் 65 ரன்கள் எடுத்து சர்பாஸ் அகமது பந்தில் அவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.