MS Dhoni: ஐபிஎல்லில் விளையாட தயார்.. தனது பேட்டை சரிசெய்யும் தோனி.. வைரலாகும் வீடியோ!

Chennai Super Kings: 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ். தோனி ஓய்வு பெற்றார். இருப்பினும், அதன் பிறகும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாடினார். அவரது உடல் அனுமதிக்கும் வரை விளையாடுவதே அவரது ஒரே குறிக்கோள் என்று எம்.எஸ்.தோனி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

MS Dhoni: ஐபிஎல்லில் விளையாட தயார்.. தனது பேட்டை சரிசெய்யும் தோனி.. வைரலாகும் வீடியோ!

எம்.எஸ்.தோனி

Published: 

14 Mar 2026 19:19 PM

 IST

2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) வருகின்ற 2926 மார்ச் 28ம் தேதி தொடங்க உள்ளது. இந்த சீசனின் முதல் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும். முன்னாள் இந்திய கேப்டனும், புகழ்பெற்ற விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான எம்.எஸ். தோனி (MS Dhoni) மீண்டும் ஐ.பி.எல் போட்டிகளில் எப்போது களமிறங்குவார்? தனது மாயாஜாலத்தை எப்போது வெளிப்படுத்துவார் என்பதை காண சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக எம்.எஸ். தோனி 19வது இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முழுமையாக தயாராக கடுமையாக பயிற்சி செய்து வருகிறார்.

ALSO READ: அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்த ஜெயிலர் சாங்.. சட்ட சிக்கலில் சிஎஸ்கே.. நீதிமன்றத்தில் சன் நெர்வொர்க் வாதம்!

தனது பேட்டை தானே சரி செய்யும் எம்.எஸ்.தோனி:


எம்.எஸ். தோனி கடுமையான பயிற்சிக்கு இடையில் தனது கிரிக்கெட் பேட்டை க்ரைண்டிங் மெசின் கொண்டு தானே கூர்மைப்படுத்தும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. பேட்டை தூக்கும்போது ஏற்படும் அதிக எடை போன்ற உணர்வை சரி செய்வதற்காக எம்.எஸ்.தோனி தனக்கு ஏற்ற அளவில் பேட்டை தானே சரிசெய்தார்.

2026 ஐபிஎல்லுக்குப் பிறகு தோனி ஓய்வு?

2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ். தோனி ஓய்வு பெற்றார். இருப்பினும், அதன் பிறகும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாடினார். அவரது உடல் அனுமதிக்கும் வரை விளையாடுவதே அவரது ஒரே குறிக்கோள் என்று எம்.எஸ்.தோனி ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆண்டில் கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஓய்வில் இருக்கும் தோனி, ஐபிஎல்லில் விளையாடுவதற்காக தோனி தனது உடற்தகுதியைப் பேணி வருகிறார். அதனால்தான் அவரால் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகளில் பயிற்சியுடன்  4 மாதங்கள் விளையாட முடிகிறது.

இருப்பினும், இந்த சீசன் எம்.எஸ். தோனியின் கடைசி சீசனாக இருக்கலாம். இந்த ஐபிஎல் சீசனுக்குப் பிறகு அவர் கிரிக்கெட்டிலிருந்து முற்றிலுமாக ஓய்வு பெறலாம் என்று கூறப்படுகிறது. சிஎஸ்கே விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனையும் ஒப்பந்தம் செய்துள்ளது. இனிவரும் காலங்களில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் மற்றும் தனது அனுபவத்தை சிஎஸ்கே அணிக்கு வழங்குவார் என்று நம்பப்படுகிறது.

ALSO READ: ஐபிஎல் 2026 சீசனுடன் தோனி ஓய்வு நிச்சயம்..? முன்னாள் சிஎஸ்கே வீரர் உறுதி..!

எம்.எஸ்.தோனியில் ஐபிஎல் வாழ்க்கை:

44 வயதான மகேந்திர சிங் தோனி கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல்லில் விளையாடி வருகிறார். இதுவரை 278 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 137.4 ஸ்ட்ரைக் ரேட்டில் 5,439 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 24 அரை சதங்களும் அடங்கும். ஐபிஎல்லில், எம்.எஸ். தோனி 158 கேட்சுகளையும், 25 ரன்-அவுட்களை செய்துள்ளார். மேலும், 47 ஸ்டம்பிங்குகளையும் மேற்கொண்டுள்ளார்.

Follow Us
விஷ்வக் சென் - கயாடு லோஹரின் ஃபங்கி - ஓடிடியில் எப்போது ரிலீஸ்?
மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட பெண் உயிரோடு வந்ததால் பரபரப்பு - பிலிபித்தில் நடந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் விளக்கம்”
எரிவாயு தட்டுப்பாடு.. சிறிய உணவகங்கள் மூடல், கருப்புச் சந்தையில் சிலிண்டர் ரூ.3000 வரை உயர்வு..
ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்ல இந்தியாவுக்கு அனுமதி.. வெளிய்றவுத்துறை அமைச்சர் சொன்ன விஷயம்..