MS Dhoni Dance Video: சிஎஸ்கே பயிற்சி முகாமில் தோனி.. க்யூட்டாக இளம் வீரர்கள் முன் நடனம்..!
MS Dhoni Dance CSK Camp: 2026 பிப்ரவரி 28ம் தேதி மாலை சென்னை வந்தடைந்த எம்.எஸ்.தோனி, நேரத்தை வீணாக்காமல் 2026 மார்ச் 1ம் தேதி காலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வலைகளில் பயிற்சி மேற்கொண்டார். அப்போது, 44 வயதிலும் அவரது உடற்தகுதி இளம் வீரர்களை மிஞ்சு அளவிற்கு இருந்தது.

எம்.எஸ்.தோனி
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் மீண்டும் “தோனி, தோனி” என்ற பழக்கமான சத்தம் எதிரொலிக்க இருக்கிறது. ஐபிஎல் 2025 சீசனுக்கு பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்காக எம்.எஸ்.தோனி மீண்டும் விளையாடுவாரா என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் 44 வயதான எம்.எஸ்.தோனி கிரிக்கெட் மீதான அதே ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புடன் சென்னை வந்தடைந்தார். கடந்த 2026 பிப்ரவரி 28ம் தேதி எம்.எஸ்.தோனி சென்னை வந்தபோது, தல ரிட்டன்ஸ் என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, பயிற்சியின்போது எம்.எஸ்.தோனி செய்த ஒரு செயல் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ALSO READ: மங்களகரமாக மஞ்சள்..! ஐபிஎல் 2026 சீசனுக்கான புதிய ஜெர்சியை வெளியிட்ட சிஎஸ்கே!
பயிற்சியில் நடனமாடிய எம்.எஸ்.தோனி:
Yes, Thala! That’s a wide! 🥰
Cuteness overloaded! 💛#WhistlePodu pic.twitter.com/liUhdOsyiy— Chennai Super Kings (@ChennaiIPL) March 2, 2026
2026 பிப்ரவரி 28ம் தேதி மாலை சென்னை வந்தடைந்த எம்.எஸ்.தோனி, நேரத்தை வீணாக்காமல் 2026 மார்ச் 1ம் தேதி காலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வலைகளில் பயிற்சி மேற்கொண்டார். அப்போது, 44 வயதிலும் அவரது உடற்தகுதி இளம் வீரர்களை மிஞ்சு அளவிற்கு இருந்தது. பயிற்சி அமர்வின் போது, தோனி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஓய்வில்லாமல் பயிற்சி மேற்கொண்டு, பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஹெலிகாப்டர் ஷாட்களையும், பெரிய சிக்ஸர்களையும் பறக்கவிட்டார்.
2026 ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக அணியின் முதல் பயிற்சி அமர்வின் போது மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தார். சுழற்பந்துவீச்சாளர் ஒருவர் தோனிக்கு பந்துவீசும்போது வைடு போட்டார். அப்போது, தோனி அம்பயர் போல் வைடு என சிக்னல் கொடுத்தது மட்டுமின்றி நடனமும் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் சவுத்ரி, ராகுல் சாஹர் மற்றும் ஆயுஷ் மத்ரே உள்ளிட்ட பல வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ALSO READ: மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம்! இந்தியா வர தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. பிசிசிஐ முடிவு என்ன?
சாம்சன் – துபே சிஎஸ்கே பயிற்சி முகாமில் இணைவது எப்போது?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே போன்ற நட்சத்திர வீரர்கள் தற்போது 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். அதனால்தான் அவர்களால் இன்னும் பயிற்சி முகாமில் இணையவில்லை. இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால், வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதிக்கு பிறகு சாம்சனும் துபேயும் சிஎஸ்கேவின் பயிற்சி முகாமில் இணைவார்கள்.