IPL 2026: காயத்தால் தவிக்கும் கொல்கத்தா.. ஐபிஎல் 2026 சீசனில் விலகிய ஹர்சித் ராணா!

Harshit Rana Ruled Out IPL 2026: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2026 பயிற்சி ஆட்டத்தில் ஹர்ஷித் ராணா காயமடைந்ததால், டி20 உலகக் கோப்பையில் இருந்து ராணா வெளியேறினார். அவருக்கு மாற்றாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் யாரை நியமித்தது என்பது தெரியாமல் இருந்தது.

IPL 2026: காயத்தால் தவிக்கும் கொல்கத்தா.. ஐபிஎல் 2026 சீசனில் விலகிய ஹர்சித் ராணா!

ஹர்சித் ராணா

Published: 

13 Mar 2026 21:13 PM

 IST

2026 இந்தியன் பிரீமியர் லீக் சீசன் (IPL 2026) தொடங்குவதற்கு முன்பே அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஐபிஎல் 2026 சீசனில் இருந்து விலகியுள்ளார். காயம் காரணமாக, கேகேஆர் அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா ஐபிஎல் 2026ல் விளையாட முடியாது. முன்னதாக, காயம் காரணமாக 2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) ஹர்சித் ராணா விலகினார். அப்போது அவருக்கு பதிலாக இந்திய அணியில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஹர்சித் ராணா ரூ. 4 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது.

காயத்தால் அவதிப்படும் ஹர்சித் ராணா:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2026 பயிற்சி ஆட்டத்தில் ஹர்ஷித் ராணா காயமடைந்ததால், டி20 உலகக் கோப்பையில் இருந்து ராணா வெளியேறினார். அவருக்கு மாற்றாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் யாரை நியமித்தது என்பது தெரியாமல் இருந்தது. இந்தநிலையில், இன்று அதாவது 2026 மார்ச் 13ம் தேதி கொல்கத்தா தனது அணியில் ஜிம்பாப்வே பந்து வீச்சாளர் பிளெசிங் முசரபானியைச் சேர்த்தது. அதன்படி, கொல்கத்தா அணியில் ஹர்ஷித்துக்குப் பதிலாக முசரபானி இடம்பெற வாய்ப்புள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்காக முசரபானி சிறப்பாக செயல்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ஐபிஎல்லின் மாலை நேர போட்டிகள் எப்போது தொடங்கும்..? நேரத்தில் மாற்றமா?

ஆண்ட்ரே ரஸ்ஸல் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஹர்ஷித் ராணா ஐபிஎல் 2026ல் இருந்து வெளியேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரும் அடியாகும். அணியின் பந்துவீச்சு, குறிப்பாக டெத் ஓவர்களில், அதிகரித்து வரும் சிரமங்களை கேகேஆர் அணி எதிர்கொள்ளலாம். ஏலத்தில் கேகேஆரால் ரூ. 18 கோடிக்கு வாங்கப்பட்ட மதிஷா பதிரானாவும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

பிளெசிங் முசரபானியின் செயல்திறன்:

பிளெசிங் முசரபானி 2026 டி20 உலகக் கோப்பையில் முன்னணி விக்கெட் வீழ்த்தியவர்களில் ஒருவராக இருந்தார். ஜிம்பாப்வே அணிக்காக சிறப்பாக செயல்பட்டு மொத்தமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷித் ராணா இல்லாததை முசரபானி ஈடுசெய்ய முடியும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நம்புகிறது.

ALSO READ: பயிற்சி அமர்வுகளில் இனி இது கிடையாது.. ஐபிஎல் அணிகளுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்ட பிசிசிஐ!

நாளை அதாவது 2026 மார்ச் 14 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது புதிய ஜெர்சியை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ வெளியிட்டுள்ள 20 போட்டிகள் கொண்ட அட்டவணையின்படி, ஐபிஎல் 2026 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் முதல் போட்டியை வருகின்ற 2026 மார்ச் 29ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. ஹர்ஷித் ராணா கடந்த 2025 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடி மொத்தம் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Follow Us
அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜின் படத்துக்கு அனிருத்தின் சம்பளம் இவ்வளவா?
பிரபாஸ் மற்றும் எகோ பட இயக்குநர் சந்திப்பு
தன்னை தாக்க வந்த சிறுத்தையை கற்களால் அடித்து கொன்ற 18 வயது இளைஞர்..
வாடிக்கையாளரை தாக்கிய ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. நடந்தது என்ன?