IPL 2026: வலுவிழந்ததா டெல்லி..? வெளியேறிய கெவின் பீட்டர்சன்.. என்ன காரணம்?

Delhi Capitals: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லாத டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், வரும் ஐபிஎல் 2026 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். கெவின் சமூக ஊடக தளமான எக்ஸ்-ல் இந்தியில் பதிவிட்டு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

IPL 2026: வலுவிழந்ததா டெல்லி..? வெளியேறிய கெவின் பீட்டர்சன்.. என்ன காரணம்?

கெவின் பீட்டர்சன்

Published: 

15 Mar 2026 08:00 AM

 IST

ஐபிஎல்லின் வரவிருக்கும் 19வது சீசனின் (IPL 2026) முதல் கட்ட அட்டவணை கடந்த 2026 மார்ச் 11ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, ஐபிஎல் 2026 சீசனானது வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் கட்டத்திற்கான அட்டவணை அறிவிக்கப்பட்ட பிறகு, மொத்தம் 10 அணிகள் தயாராகத் தொடங்கியுள்ளன. சில அணிகள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றன. சில அணிகள் புதிய ஜெர்சிகளை வெளியிட்டுள்ளன. இதுபோன்ற அனைத்து அப்டேட்களும் வெளியாகி வரும் நிலையில், பயிற்சியாளர்களிடமும் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதாவது 19வது சீசனுக்கு முன்பே டெல்லி அணியை (Delhi Capitals) விட்டு ஒரு முக்கிய பயிற்சியாளர் வெளியேற முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக, சமூக ஊடகங்களில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன.

ALSO READ: கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டனா? ரிங்கு சிங்குக்கு குறி வைக்கும் நிர்வாகம்!

வெளியேறிய கெவின் பீட்டர்சன்:


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லாத டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், வரும் ஐபிஎல் 2026 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். கெவின் சமூக ஊடக தளமான எக்ஸ்-ல் இந்தியில் பதிவிட்டு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். பீட்டர்சன் கடந்த  2025 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வழிகாட்டியாக இருந்தார். இந்த 2026ம் ஆண்டு இது தொடர்பாக பேசிய கெவின் பீட்டர்சன், “இந்த வேலைக்கு நான் எதிர்பார்த்த அளவுக்கு நேரம் ஒதுக்க முடியாது. எனவே, இந்த 2026ம் ஆண்டு டெல்லி டக்அவுட்டில் வழிகாட்டியாக இருக்க மாட்டேன். நீங்கள் என்னை மீண்டும் வர்ணனை பெட்டியில் பார்க்கலாம். ஐபிஎல் உலகின் சிறந்த லீக். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார். இருப்பினும், பீட்டர்சன் இன்னும் ஐபிஎல்லில் 2026ம் ஆண்டு வர்ணனை மூலம் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய பீட்டர்சன், “இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்கு வழிகாட்டும் பொறுப்பை நான் ஏற்க முடியாது. இந்த சீசனில் அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

ALSO READ: எம்.எஸ்.தோனியின் ஓய்வு உறுதி..? முன்னாள் சிஎஸ்கே வீரர் கொடுத்த தகவல்!

டெல்லி அணியின் முதல் போட்டி எப்போது..?

இதற்கிடையில், டெல்லி அணி 19வது சீசனின் முதல் போட்டியில் 2026 ஏப்ரல் 1ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன் பிறகு, 2026 ஏப்ரல் 4 ஆம் தேதி மும்பை அணியை எதிர்கொள்கிறது. பின்னர், 2026 ஏப்ரல் 8ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பின்னர், 2026 ஏப்ரல் 11ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..