IPL 2026: சிஎஸ்கே அட்டவணையில் திடீர் மாற்றம்.. சேப்பாக்கத்தில் இருந்து அகமதாபாத்திற்கு மாறும் போட்டி!
GT vs CSK: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வருகின்ற 2026 ஏப்ரல் 26ம் தேதி நடைபெறவிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, தற்போது சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் 2026 போட்டி (IPL 2026) அட்டவணையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வருகின்ற 2026 ஏப்ரல் 26ம் தேதி நடைபெறவிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, தற்போது சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், முன்னதாக சேப்பாக்கில் நடைபெறவிருந்த, வருகின்ற 2026 மே 21ம் தேதி நடைபெறவிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும். அகமதாபாத் மற்றும் குஜராத்தின் பிற பகுதிகளில் ஏப்ரல் 26, 2026 அன்று நகராட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளதால், இந்தச் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் காரணமாக போட்டி தடையா..?
🚨 NEWS 🚨@gujarat_titans – @ChennaiIPL fixtures swapped for April 26 and May 21, owing to municipal corporation elections in Ahmedabad and other parts of Gujarat!
More Details 🔽 | #TATAIPL | #KhelBindaashttps://t.co/xDibwhhT8C
— IndianPremierLeague (@IPL) April 13, 2026
முன்னதாக, தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக ஐபிஎல் அட்டவணை இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. முதலில், முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. பின்னர், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஐபிஎல்-இன் இரண்டாம் கட்டத்திற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பிளேஆஃப் போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. பிளேஆஃப், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: ரோஹித் சர்மாவின் காயம்.. சோகத்தில் மும்பை இந்தியன்ஸ்.. மீண்டு வருவாரா?
ஐபிஎல் 2026-ல் இரு அணிகளின் செயல்பாடு:
ஐபிஎல் 2026 சீசனில் முதல் 20 போட்டிகளுக்குப் பிறகு இரு அணிகளும் தடுமாறி வருகின்றன. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, 2 புள்ளிகளுடன், சிஎஸ்கே அணி புள்ளி அட்டவணையில் 9-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று, இரண்டில் தோல்வியடைந்துள்ளது. குஜராத், லக்னோ மற்றும் டெல்லியை வென்றுள்ளது. அதே நேரத்தில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளது. சென்னை, டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான தனது ஒரே போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.