IPL 2026: டெல்லியில் டெல்லியுடன் மோதும் பெங்களூரு.. இன்றைய போட்டி யாருக்கு சாதகம்?
DC vs RCB Match Preview: விராட் கோலி (Virat Kohli) சொந்த மண்ணில் விளையாடினாலும், பெங்களூரு அணிக்காக டெல்லி மண்ணில் களமிறங்குவார். அதன்படி, இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிப்பது கடினம். இந்தநிலையில், புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளின் நிலைமை என்ன...? நேருக்கு நேர் மோதல் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.

டெல்லி Vs பெங்களூரு
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று அதாவது 2026 ஏப்ரல் 27ம் தேதி மீண்டும் மோதவுள்ளன. இந்த போட்டியானது டெல்லியில் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி (Virat Kohli) சொந்த மண்ணில் விளையாடினாலும், பெங்களூரு அணிக்காக டெல்லி மண்ணில் களமிறங்குவார். அதன்படி, இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிப்பது கடினம். இந்தநிலையில், புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளின் நிலைமை என்ன…? நேருக்கு நேர் மோதல் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: முதல் சூப்பர் ஓவர் – லக்னோவை வீழ்த்தி கொல்கத்தா திரில் வெற்றி
இரு அணிகளின் நிலைமை என்ன..?
டெல்லி கேப்பிடல்ஸ் அணி சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமாக இருக்கலாம். ஆனால், ஐபிஎல் 2026 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி காட்டியுள்ள சிறப்பான ஆட்டத்தைப் பார்க்கும்போது, பெங்களூரு அணியை தடுப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தற்போது புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணிக்காக ஃபில் சால்ட் இன்று விளையாடவில்லை என்றாலும், விராட் கோலியும் கேப்டன் ரஜத் பதிதாரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே 34 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 19 போட்டிகளிலும், டெல்லி கேப்பிடல்ஸ் 13 போட்டிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. டெல்லியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 முறையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம், இந்த வரலாற்றுப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஆர்சிபி ஆதிக்கம் செலுத்துவதாகத் தெரிகிறது.
யார் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்..?
ஐபிஎல் 2026 சீசனில் சிறந்த பார்மை கருத்தில் கொண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சாதகமான நிலை இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், டெல்லி அணி மீண்டு வந்தால், அவர்களால் வெற்றி பெற முடியும். டெல்லியின் ஆடுகளத்தில் 200 ரன்களுக்கு மேல் எடுத்தாலும் சேஸ் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்யலாம். மேலும், இங்கு இரவில் பனி பொழிவதால், பந்துவீச்சாளர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
ALSO READ: தீவிரமாகும் தோனியின் காயம்.. ஐபிஎல் 2026ல் விளையாடுவது சந்தேகமா? ஃபிளெமிங் கொடுத்த அப்டேட்!
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிளேயிங் லெவன்:
பதும் நிசாங்கா, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, சமீர் ரிஸ்வி, டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), கைல் ஜேமிசன்/துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், டி நடராஜன், ஆக்கிப் நபி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேயிங் லெவன்:
ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், ரசிக் சலீம் தார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா