CSKvsMI : சஞ்சு சாம்சன் அதிரடி சதம் – மும்பையை வீழ்த்தி சென்னை அபார வெற்றி
IPL 2026 : ஐபிஎல் 2026 33வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 208 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.

சஞ்சு சாம்சன் - ஹர்திக் பாண்ட்யா
ஐபிஎல் 2026 33வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணி வீரர்கள் முகேஷின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினர். முகேஷின் சௌத்ரியின் அம்மா மறைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சென்னை அணி வீரர்கள் கையில் கருப்புப் பட்டைகளை அணிந்துகொண்டு களமிறங்கினர்.
சஞ்சு சாம்சன் அதிரடி சதம்
இதனையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 208 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு மொத்தம் 207 ரன்களைக் குவித்தது. சென்னை அணியின் சார்பில், தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையும் படிக்க : IPL 2026: மும்பைக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுவாரா? மறுத்த ருதுராஜ் கெய்க்வாட்!
அணியின் மற்ற வீரர்கள் சீரான இடைவேளைகளில் விக்கெட்டுகளை பறி கொடுத்தாலும் பொறுப்புடன் ஆடி அணி 200 ரன்கள் மேல் எடுக்க உதவினார். மேலும் சென்னை அணிக்காக தனது 2வது சதத்தையும் அவர் பதிவு செய்தார்.
மறைந்த அம்மாவை நினைவுகூர்ந்த முகேஷ் சௌத்ரி
Mukesh Choudhary’s mother passed away yesterday. After performing her last rites, he came back today to play against MI and, in his very first over, gaves just 4 runs and took the wicket of Quinton de Kock.🫡
Salute to you, brother.🙌 pic.twitter.com/0MHIN29OQD
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) April 23, 2026
இதற்கிடையில், மும்பை அணி இலக்கை நோக்கித் துரத்தத் தொடங்கியபோது, அகீல் ஹொசைன் அந்த அணிக்கு முதல் அதிர்ச்சியை அளித்தார். அவரது டேனிஷ் மாலேவாரை ரன் ஏதும் எடுக்கவிடாமல் ஆட்டமிழக்கச் செய்தார். அதைத் தொடர்ந்து, முகேஷ் சௌத்ரி தனது முதல் ஓவரிலேயே தொடர்ந்து 4 டாட் பால்களை வீசியதுடன் முக்கிய விக்கெட்டையும் வீழ்த்தினார். அந்த அணியின் குவிண்டன் டி காக்கின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து மறைந்த தன் அம்மாவை நினைவு கூறும் விதமாக வானத்தை பார்த்தார். அந்த தருணம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க : IPL 2026: முன்னேறிய ஆர்ஆர்.. சரிந்த ஆர்சிபி, எஸ்ஆர்ஹெச்.. புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே நிலைமை என்ன?
மும்பை அணியின் இன்னிங்ஸில் உயிர் இல்லை எனும் அளவுக்கு அந்த அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இடையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா நிதானமாக ஆடி அணியை மீட்டெடுக்க முயன்றாலும் அவர்கள் போராட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் 36 ரன்களுடனும், திலக் வர்மா 37 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
அவர்களுக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் ஏமாற்றினார். இதனையடுத்து 100 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. சிஎஸ்கேவின் அகில் ஹூசைன் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.