IPL 2026: ஐபிஎல் 2026க்கான ஏலம் எப்போது, எங்கு நடைபெறும்? வெளியான தகவல்..!

IPL 2026 Auction: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஐபிஎல் 2025ம் ஆண்டு கடைசி 2 இடத்தைப் பிடித்தன. சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக ஐபிஎல் 2025 சீசனில் பாதியில் வெளியேறிய நிலையில், எம்எஸ் தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.

IPL 2026: ஐபிஎல் 2026க்கான ஏலம் எப்போது, எங்கு நடைபெறும்? வெளியான தகவல்..!

ஐபிஎல் 2026 ஏலம்

Published: 

10 Nov 2025 12:06 PM

 IST

இந்தியன் பிரீமியர் லீக்கின் (Indian Premier League) புதிய சீசன் தொடங்குவதற்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளன. ஐபிஎல் 2026 ஏலத்திற்கான தேதியும் நெருங்கி வருகிறது. ஐபிஎல் அணிகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் நடந்து வருகின்றன. கிடைத்த தகவலின்படி, ஐபிஎல் 2026 (IPL 2026) ஏலம் வருகின்ற 2025 டிசம்பர் 15ம் தேதி இந்தியாவில் நடைபெறலாம். முன்னதாக, இரண்டு சீசன்களுக்கான ஏலங்கள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டன. கடந்த ஐபிஎல் 2025 ஏலம் சவுதி அரேபியாவிலும் நடைபெற்றது. இந்தநிலையில், ஐபிஎல் 2026 ஏலம் பற்றி விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: டிசம்பரில் மினி ஏலம்.. சிஎஸ்கே அணி இந்த 4 வீரர்களை விடுக்கிறதா..?

2025 ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி!

ஐபிஎல் 2025ம் ஆண்டு 18 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது. கடந்த 17 சீசன்களாக ஐபிஎல் கோப்பையை வெல்ல ஆர்சிபி காத்திருந்தது. ஐபிஎல் 2025 இல் முதல் முறையாக ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பை ரஜத் படிதார் ஏற்றுக்கொண்டார். முதல் முறையாக கேப்டனாக ஆனவுடன், ரஜத் படிதார் தனது அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

சாம்பியன்கள் ஏமாற்றம்:


ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஐபிஎல் 2025ம் ஆண்டு கடைசி 2 இடத்தைப் பிடித்தன. சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக ஐபிஎல் 2025 சீசனில் பாதியில் வெளியேறிய நிலையில், எம்எஸ் தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் ஐபிஎல்லின் 18வது சீசனில் சென்னை அணி வெற்றியை பெற முடியாமல் தவித்து 10வது இடத்தைப் பிடித்தது. இதற்கிடையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐபிஎல் 2025ம் ஆண்டு வைபவ் சூர்யவன்ஷி என்ற இளம் வீரரை அறிமுகப்படுத்தினாலும், ஆனால் அந்த அணி இன்னும் 9வது இடத்தைப் பிடித்தது.

ALSO READ: 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை.. போட்டிகளுக்காக 5 மைதானங்கள் தேர்வு..

இந்த 2026 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தங்கள் அணிகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளும் ஏற்கனவே வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், எந்த வீரர் எந்த அணிக்கு நியமிக்கப்படுவார் என்பதை தீர்மானிக்க சுமார் ஒரு மாத காலமாகும். இதற்கிடையில், சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். சஞ்சு சாம்சனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பரிசீலித்து வருகிறது. அதேநேரத்தில், ரவீந்திர ஜடேஜா மற்றும் டொவால்ட் பிராவிஸை சென்னை அணியிடம் இருந்து ராஜஸ்தான் அணி கேட்டு வருவதாக கூறப்படுகிறது.