IPL 2027: ஒரு ஓவரில் 37 ரன்கள்.. ஐபிஎல்லில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த 5 பந்துவீச்சாளர்கள்..!
Most Runs Single Over In IPL: ஐபிஎல் போட்டி 20 ஓவர் கொண்ட ஒரு போட்டியாகும். ஒரு ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டால், ஸ்கோர் 36 ரன்கள் ஆகும். இருப்பினும், ஐபிஎல் வரலாற்றில், 2 பந்துவீச்சாளர்கள் 37 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளனர் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? அத்தகைய மோசமான சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.

ஒரு ஓவரில் அதிக ரன்கள்
சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் (IPL 2026) போன்ற போட்டிகள் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான போட்டியாகவே பார்க்கப்படுகிறது. இதில், வீரர்கள் முதல் பந்திலிருந்தே சிக்ஸர்களை பறக்கவிடுகிறார்கள். ஒரு காலத்தில் டி20 கிரிக்கெட்டில் 160 முதல் 170 ரன்கள் என்பதே வெற்றிக்கு தேவையான ரன்களாக பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய காலத்தில் 250 ரன்கள் எடுப்பது ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது. ஐபிஎல் போட்டியிலும் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பேட்ஸ்மேன்களின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்த லீக்கின் வரலாற்றில், ஒரே ஓவரில் மிக மோசமாகத் தாக்கப்பட்டு, தங்கள் பெயரில் அதிக ரன்களை பதிவுசெய்த 5 பந்துவீச்சாளர்கள் (Bowlers) உள்ளனர். அந்தச் சாதனை, அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஓவர் என்பதாகும். அதன்படி, ஓரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம்.. டாப் 2 பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி!
ஐபிஎல் போட்டி 20 ஓவர் கொண்ட ஒரு போட்டியாகும். ஒரு ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டால், ஸ்கோர் 36 ரன்கள் ஆகும். இருப்பினும், ஐபிஎல் வரலாற்றில், 2 பந்துவீச்சாளர்கள் 37 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளனர் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? அத்தகைய மோசமான சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.
அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்கள் யார்?
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஓவருக்கான சாதனையை பிரசாந்த் பரமேஸ்வரன் மற்றும் ஹர்ஷல் படேல் போன்றோர் இந்த மோசமான சாதனையை படைத்துள்ளனர். 2011-ல், கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடிய பிரசாந்த் பரமேஸ்வரன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ஒரு ஓவரில் 37 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதேசமயம், 2021ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய ஹர்ஷல் படேல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஒரு ஓவரில் 37 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
அதிக ரன்களை விட்டுகொடுத்த வெளிநாட்டு வீரர்:
ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுகொடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் கலீல் அகமது மற்றும் பர்விந்தர் அவானா ஆகியோருடன் ஒரே ஒரே வெளிநாட்டு வீரரும் இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸ் கடந்த 2022ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஒரு ஓவரில் 35 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகள்.. பின்தங்கிய நிலையில் சிஎஸ்கே..!
ஐபிஎல் தொடரில் ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த முதல் 5 பந்துவீச்சாளர்கள்
- பிரசாந்த் பரமேஸ்வரன் (2011) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 37 ரன்கள்
- ஹர்ஷல் படேல் (2021) – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 37 ரன்கள்
- டேனியல் சாம்ஸ் (2022) – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 35 ரன்கள்
- கலீல் அகமது (2025) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 33 ரன்கள்
- பர்விந்தர் அவானா (2014) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 33 ரன்கள்