India’s Asia Cup 2025 Squad: துணை கேப்டனாக அகர்கரின் முதல் தேர்வாக கில் இல்லையா..? வெளியான ஷாக் ரிப்போர்ட்!
Shubman Gill Vice-Captaincy: 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் அக்சர் படேல் பெயர் பரிசீலிக்கப்பட்ட போதிலும், கில்லின் தலைமைத்துவத் திறன் மற்றும் எதிர்கால கேப்டன்ஷிப் திறனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

2025 ஆசியக் கோப்பைக்கான (2025 Asia Cup) இந்திய அணியை (Indian Cricket Team) அறிவிக்கும்போது அதில் துணை கேப்டனாக கில் முதல் தேர்வாக இல்லை என்றும், பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு இந்த முடிவ் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கும்போது அணியின் மற்ற 14 வீரர்களை வெளியிடுவதற்கு முன்பு, சுப்மன் கில் (Shubman Gill) பெயர் சொன்னவுடன் துணை கேப்டன் என்ற வார்த்தை சேர்த்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி, ஒரு வருடத்திற்கு மேலாக டி20 இந்திய அணியின் இடம் பிடிக்காத சுப்மன் கில்லுக்கு எப்படி துணை கேப்டன் பதவி என்பதுதான். அதனை பற்றி விரிவாக பார்ப்போம்.
ALSO READ: மீண்டும் கழட்டிவிடப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்.. கேள்வி எழுப்பிய ரசிகர்கள்.. பிசிசிஐ விளக்கம்..!




மும்பையில் மோசமான வானிலை காரணமாக கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் தாமதத்திற்கு பிறகு 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி குறித்த தேர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆரம்பம் முதலே சுப்மன் கில் பெயர் மைய புள்ளியாகவே இருந்தது. கில் தேர்வு செய்யப்பட்டாலும் சரி, தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் சரி, அது அதிகம் பேசப்படும் என்பதே எதிர்பார்க்கப்பட்டது. இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் முதல் தேர்வாக இல்லை என்றே கூறப்படுகிறது.
முதல் தேர்வாக யார் இருந்தார்..?
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளின் அறிக்கையின்படி, 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டது பல கட்ட ஆலோசனைக்கு பிறகே நடந்தது. தேர்வுக் குழு ஆரம்பத்தில் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் பெயரையே துணை கேப்டன் பட்டியலில் வைத்திருந்தது. இருப்பினும், தேர்வாளர்கள் இறுதியில் சுப்மன் கில்லுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கு காரணம், இந்தியாவின் எதிர்கால தலைமைத்துவத்திற்கு சுப்மன் கில் ஒரு முக்கிய நபராக கருதப்படுகிறார்.
ALSO READ: 10 வினாடி விளம்பரத்திற்கு ரூ. 16 லட்சம் பணம்.. களைகட்ட தொடங்கிய 2025 ஆசியக் கோப்பை..!
நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெற்ற தேர்வு கூட்டத்தில் துணை கேப்டன் பதவி குறித்த விவாதங்கள் நடைபெற்றது. அப்போது, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வீடியோ காலில் கலந்து கொண்டு, எதிர்கால கேப்டனாக உருவாக்கக்கூடிய இளைய வீரரை தேர்வு செய்யும்படி கூறியுள்ளார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்தும் சுப்மன் கில், டி20 அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்..?
T20I Vice-Captain ✅
ODI Vice-Captain ✅
Test Captain ✅Shubman Gill — a class apart, carrying an aura like no other.
— JassPreet (@JassPreet96) August 20, 2025
சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவிக்கையில், “ நாங்கள் இலங்கையில் விளையாடியபோது, இந்திய அணியின் துணை கேப்டனாக கில் இருந்தார். ஆனால், அதன்பிறகு, கிலி டெஸ்ட் கிரிக்கெட்டில் பிஸியாக இருந்துவிட்டார். அவரிடம் சில தலைமைத்துவ பண்புகளை நாங்கள் வெளிப்படையாக காண்கிறோம். இங்கிலாந்து மண்ணிலும் சிறப்பாக செயல்பட்டு, எங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டார். ஒரு கேப்டனாக எவ்வளவு அழுத்தம் இருக்கும்போது, இப்படியான செயல்திறன் சிறந்தது” என்றார்.