IND W vs SA W: 5 டி20 போட்டிகள்..! தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான வலுவான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
IND W Vs SA W T20I Series 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2026 ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணியில் புதிதாக காஷ்வி கவுதம் மற்றும் அனுஷ்கா ஷர்மா என இரண்டு வீராங்கனைகள் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய மகளிர் அணி
இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) 2026 சீசன் தொடங்க இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில், நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இந்தியா மகளிர் மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் இடையேயான டி20 தொடருக்கான அணியை அறிவித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான இந்திய மகளிர் அணியே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்தியா அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ: 2027 ஒருநாள் உலகக் கோப்பை எப்போது தொடங்குகிறது? எத்தனை அணிகள் பங்கேற்கும்?
2 வீராங்கனைகளுக்கு கிடைத்த வாய்ப்பு:
🚨 𝗦𝗾𝘂𝗮𝗱 𝗔𝗻𝗻𝗼𝘂𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁 🚨
Here’s a look at #TeamIndia‘s squad for the 5️⃣-match T20I series against South Africa 🙌
Details ▶️ https://t.co/GpzX5MiEDp#SAvIND pic.twitter.com/5tEP7x4HnZ
— BCCI Women (@BCCIWomen) March 24, 2026
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2026 ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணியில் புதிதாக காஷ்வி கவுதம் மற்றும் அனுஷ்கா ஷர்மா என இரண்டு வீராங்கனைகள் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு புதிய வீராங்கனைகளுடன் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான மீதமுள்ள டி20 அணியில் ஏற்கனவே உள்ள வீராங்கனைகளே இடம்பெற்றுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் நடைபெறவுள்ள டி20 தொடருக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 வீரர்களின் பெயர்களைப் பார்ப்போம்.
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், அருந்ததி ரெட்டி, ரேணுகா தாக்கூர், கிராந்தி கவுட், ஸ்ரேயங்கா பாட்டீல், காஷ்வி கவுதம், பார்தி ஃபுல்மாலி, உமா சேத்ரி, அனுஷ்கா சர்மா.
இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயண அட்டவணை:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் வருகின்ற 2026 ஏப்ரல் 17ம் தேதி தொடங்க உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. முதல் இரண்டு போட்டிகள் வருகின்ற 2026 ஏப்ரல் 17 மற்றும் 19ம் தேதிகளில் டர்பனில் நடைபெறவுள்ளது. அடுத்த இரண்டு போட்டிகள் வருகின்ற 2026 ஏப்ரல் 22 மற்றும் 25ம் தேதிகளில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும். இந்தத் தொடரின் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகின்ற 2026 ஏப்ரல் 27ம் தேதி பெனோனியில் நடைபெறுகிறது.
ALSO READ: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய அட்டவணை.. களமிறங்கும் கோலி, ரோஹித்!
2026 மகளிர் டி20 உலகக் கோப்பை வருகின்ற 2026 ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. அதன்படி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய மகளிர் அணியின் இந்த டி20 தொடர் மிக முக்கியமானது. அதன்படி, இந்திய மகளிர் அணி டி20 உலகக் கோப்பைக்கான தங்களை தயாராக வைத்துகொள்ள முயற்சிக்கும்.