T20 World Cup 2026: கேப்டனாக சூர்யகுமார் யாதவ்.. இல்லாத கில்.. 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

2026 டி20 உலகக் கோப்பை வருகின்ற 2026 பிப்ரவரி 7ம் தேதி முதல் தொடங்கியது. இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அதாவது 2025 டிசம்பர் 20ம் தேதி அறிவிக்கப்பட்டது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் பத்திரிகையாளர் சந்திப்பில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தனர்.

T20 World Cup 2026: கேப்டனாக சூர்யகுமார் யாதவ்.. இல்லாத கில்..  2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணி

Updated On: 

20 Dec 2025 14:32 PM

 IST

2026 டி20 உலகக் கோப்பை (ICC Men’s T20 World Cup 2026) வருகின்ற 2026 பிப்ரவரி 7ம் தேதி முதல் தொடங்கியது. இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணி (Indian Cricket Team) இன்று அதாவது 2025 டிசம்பர் 20ம் தேதி அறிவிக்கப்பட்டது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் பத்திரிகையாளர் சந்திப்பில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தனர். 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், அக்ஸர் படேல் துணை கேப்டனாகவும் இருப்பார்.

2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, அக்ஸர் படேல் (துணை கேப்டன்), திலக் வர்மா, ஷிவம் துபே, ரிங்கு சிங், பும்ரா, ராணா, அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன், வருண் சக்கர்வர்த்தி, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர்.

ALSO READ: ஆசியக் கோப்பை பைனலில் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான்.. வெல்லப்போவது யார்..?

இந்திய அணி அறிவிப்பு:

 

2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்காக 4 பேட்ஸ்மேன்கள், 2 விக்கெட் கீப்பர்கள், 2 ஸ்பின் ஆல்ரவுண்டர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர்கள், 2 ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என கலவையான அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. 2026 டி20 உலகக் கோப்பைக்கான போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும். எனவே, நிலைமைகளை மனதில் கொண்டு பிசிசிஐ 15 வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

உலகக் கோப்பையில் மொத்தமாக 20 அணிகள்:

2026 டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும். 20 அணிகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் ஏ-வில் உள்ளது. அனைத்து போட்டிகளும் இந்தியாவில் 5 இடங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு வராவிட்டால், இறுதிப் போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். பாகிஸ்தான் தனது போட்டிகளை இலங்கையில் விளையாடும். பாகிஸ்தான் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அதன் நாக் அவுட் போட்டிகள் இலங்கையில் நடைபெறும்.

ALSO READ: கேமராமேனை தாக்கிய சிக்ஸர்… கட்டி அணைத்து மன்னிப்பு கேட்ட பாண்டியா

2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் லீக் ஸ்டேஜ் அட்டவணை

2026 பிப்ரவரி 7 – அமெரிக்கா vs இந்தியா
2026 பிப்ரவரி 12 – நமீபியா vs இந்தியா
2026 பிப்ரவரி 15 – பாகிஸ்தான் vs இந்தியா
2026 பிப்ரவரி 18 – நெதர்லாந்து vs இந்தியா

எதிர்பார்ப்பை எகிற செய்யும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் டிஸ்குளோசர் டே படம்
மார்பக புற்றுநோய்.. தழும்புகளை முதன்முறையாக வெளிப்படுத்திய ஏஞ்சலினா ஜோலி
பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்