யாரென தெரிகிறதா?.. ஆஸி.,யில் இந்திய வீரர்களை பார்த்து ஷாக்கான ஓட்டுநர்!
Ind vs Aus odi 2025: இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல், பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவரும் அடிலெய்ட் மைதானத்தில் இருந்து வாடகை காரில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், ஓட்டுநர் இவர்களை யாரென கவனிக்காமல் இருப்பதும், பின்னர் திரும்பி பார்த்து திகைத்துபோனதும் பதிவாகியுள்ளது. எனினும், அவர் உணர்ச்சி வசப்படாமல் தனது பணியை தொடர்ந்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த போட்டியில் மழையால் பலமுறை இடையூறு ஏற்பட்ட முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. தொடர்ந்து, இரு அணிகளும் மோதிய இரண்டாவது போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங் தேர்வு செய்தது. தொடர்ந்து, இந்திய அணி தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா மற்றும் கேப்டன் கில் களமறிங்கினர். இதில் கில் 9 ரன்களில் ஆவுட் ஆகி ஏமாற்றமளித்தார். தொடர்ந்து, விராட் கோலியும் 0 ரன்களில் அவுட்டாகினார். அதன்பின்னர் கைக்கோர்த்த ரோஹித் ஷர்மா, ஸ்ரேயஸ் ஐயரும் ரன்களை குவித்தனர். பின் ரோஹித் 73 ரன்களும், ஸ்ரேயஸ் 61, அக்சர் படேல் 44 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.
இப்படி, பல்வேறு சொதப்பல்களுடன் இந்திய அணி 250 ரன்களைத் தொடுவதே சிரமம் என்ற சூழலில், ஹர்ஷித் (24), அர்ஷ்தீப் சிங் கூட்டணி கைகோர்த்து 50 ஓவர்கள் முடிவில் 264 ரன்களாக உயர்த்தினர். தொடர்ந்து, 265 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமறிங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்களான மிட்செல் மார்ஷும், டிராவிஸ் ஹெட்டும் நிதானமாக விளையாடினர்.




Also read: IND vs AUS: அடிலெய்டிலும் இந்திய அணி தோல்வி.. கேப்டனாக தனது முதல் தொடரை இழந்த கில்!
தொடர்ந்து அவர்கள் அவுட்டாக, மேத்யூ ஷார்ட் (74) அவரது பங்குக்கு நிதானமான ஆட்டத்தை கடைபிடித்து ரன்களை குவித்தார். எனினும், இந்திய வீரர்களின் தடுமாற்றத்தால் 47வது ஓவரிலேயே இலக்கை எட்டி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து, 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் கில் கூறும்போது, எங்களிடம் வெற்றி பெறுவதற்கு போதுமான ரன்கள் இருந்த போதும், சில எளிய கேட்ச்களை விட்டுவிட்டதால், வெற்றி கடினமானதாக தெரிவித்தார். மேலும், மழை சமயம் என்பதால் டாஸ் வெற்றி மிக முக்கியம் என்றும், 15- 20 ஓவர்களுக்கு பிறகே பிச் நன்றாக அமைந்ததாகவும் கூறினார்.
வைரலாகும் வீடியோ
Jaisu, Jurel and Prasidh in an Uber ride in Adelaide 🇦🇺 pic.twitter.com/c3FuVP9PeN
— Wren (@vyomanaut02) October 22, 2025
இதனிடையே, போட்டி நடைபெறும் அடிலெய்ட் மைதானத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜெய்ஸ்வால், துரூவ் ஜுரேல் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவரும் உபர் (Uber) கேப்பில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், காரில் அமரும் வாடிக்கையாளர்கள் யாரென்று தெரியாமல் ஓட்டுநர் காத்திருக்க, பின்னர் அவர்கள் காரில் ஏறியதும் அவர்கள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் என்பதை உணர்ந்து ஆச்சரியமடைந்தார். இந்த வைரல் வீடியோ அந்த காரில் இருந்த டேஷ் கேமரா (Dashcam) மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், பிரசித் கிருஷ்ணா டிரைவரின் அருகில் அமர்ந்திருக்கிறார். ஜெய்ஸ்வால், ஜுரேல் பின்பக்க இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.
அத்துடன், அந்த வீடியோவில் ஓட்டுநர் தனது உற்சாகத்தை ஒருபோதும் வெளிகாட்டாமல் அவரது பணியை அமைதியாக செய்து வருகிறார். எனினும், தொடக்கத்தில் அவரது முகபாவனைகள் அவர் எவ்வளவு ஆச்சர்யப்பட்டார் என்பதை காட்டுவதாக அமைத்திருந்தது. இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த மூன்று வீரர்களும் முன்பு IPLல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்து விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.