Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India vs West Indies Test: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. இந்திய அணி எப்போது அறிவிக்க வாய்ப்பு?

India vs West Indies Test Series: இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்த கருண் நாயர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் ரிஷப் பண்ட் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற வாய்ப்பில்லை.

India vs West Indies Test: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. இந்திய அணி எப்போது அறிவிக்க வாய்ப்பு?
India Vs West Indies Test
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Sep 2025 17:05 PM IST

வருகின்ற 2025 அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான இந்திய அணி (India vs West Indies Test Series) இன்று (2025 செப்டம்பர் 23) அல்லது நாளை (2025 செப்டம்பர் 24ம் தேதி) அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 அக்டோபர் 2ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடருக்கான அறிவிப்பில் சில ஆச்சரியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத் மற்றும் டெல்லியில் நடைபெறும் 2 போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வாளர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அதேநேரத்தில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்ற சில வீரர்கள் இதில் இடம் பெறமாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.

ரிஷப் பண்ட் காயம்:

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்த கருண் நாயர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் ரிஷப் பண்ட் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற வாய்ப்பில்லை. எனவே, அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்படலாம். அதேநேரத்தில், துருவ் ஜூரெல் விக்கெட்டு கீப்பராக களமிறங்கினாலும், உள்ளூர் கிரிக்கெட்டில் முத்திரை பதித்துள்ள தமிழ்நாடு வீரர் ஜெகதீசன் ரிசர்வ் வீரராக சேர்க்கப்படலாம்.

ALSO READ: பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் இந்திய வீரர்..? கிடைத்த வலுவான தகவல்..!

ஆகாஷ் தீப் சந்தேகம்:

இந்திய மண் என்பதால் சுழலுக்கு சாதகமான பிட்சாக பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியாவிற்கு அதிக வேகப்பந்து வீச்சாளர்கள் தேவையில்லை என்பதால், ஆகாஷ் தீப் நீக்கப்படலாம். அதன்படி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்படலாம். ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி உடற்தகுதி பெற்றுவிட்டதால், கூடுதல் பந்துவீச்சு தேவை என்றால் இவரை இந்திய அணி பயன்படுத்தலாம். சுழற்பந்தை பொறுத்தவரை குல்தீப் யாதவ், ஆல்ரவுண்டர்கள் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் 2025 அக்டோபர் 2ம் தேதி அகமதாபாத்திலும், 2வது டெஸ்ட் 2025 அக்டோபர் 10ம் தேதி டெல்லியிலும் நடைபெறுகிறது.

ALSO READ: ஒருநாள் ஓய்வு முடிவு வாபஸ்! 2 ஆண்டுகளுக்கு பிறகு.. பாகிஸ்தான் எதிராக களமிறங்கும் டிக் காக்..!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியின் கணிக்கப்பட்ட அணி:

சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிதீஷ் ரெட்டி மற்றும் என். ஜெகதீசன்