BCCI President: பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் இந்திய வீரர்..? கிடைத்த வலுவான தகவல்..!
Former Delhi captain Mithun Manhas: பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்கும் மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரர் மன்ஹாஸ் ஆவார். மிதுன் மன்ஹாஸ் தற்போது ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு, துலீப் டிராபியில் வடக்கு மண்டலத்திற்கான ஒருங்கிணைப்பாளராகவும், ஐபிஎல் உரிமையாளரான குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை ஊழியர் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் மிதுன் மன்ஹாஸ் (Mithun Manhas) பிசிசிஐயின் புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரில் பிறந்த மிதுன் மன்ஹாஸ் பெயர் பிசிசிஐயின் தலைவராகும் (BCCI President) போட்டியில் முதலிடத்தில் உள்ளது. நேற்று அதாவது 2025 பிப்ரவரி 20ம் தேதி டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு மிதுன் மன்ஹாஸின் பெயர் வந்துள்ளது. இருப்பினும், இது குறித்து இதுவரை பிசிசிஐயிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலுக்கு வெளியாகவில்லை. வருகின்ற 2025 செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும் பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்தில் பிசிசிஐயின் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸின் பெயர் அறிவிக்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. மன்ஹாஸ் தலைவராக வந்தால், பிசிசிஐயின் புதிய தலைவராக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத ஒரு வீரர் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.
மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரர்:
பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்கும் மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரர் மன்ஹாஸ் ஆவார். மிதுன் மன்ஹாஸ் தற்போது ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு, துலீப் டிராபியில் வடக்கு மண்டலத்திற்கான ஒருங்கிணைப்பாளராகவும், ஐபிஎல் உரிமையாளரான குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை ஊழியர் உறுப்பினராகவும் பணியாற்றினார். பிசிசிஐ தலைவர் பதவிக்கு மிதுன் மன்ஹாஸின் பெயர் எதிர்பாராத வேட்பாளராக வெளியாகியுள்ளது.




ALSO READ: மீண்டும் மீண்டுமா..? செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்த பாகிஸ்தான்.. அதிருப்தியில் ஐசிசி!
முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங்கின் பெயர் ஆரம்பத்தில் பிசிசிஐ தலைவராக விவாதிக்கப்பட்டது. இருப்பினும், மிதுன் மன்ஹாஸ் இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகத் தெரிகிறது. 70 வயது வரம்பு காரணமாக ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகினார். ரோஜர் பின்னிக்கு முன்பு, சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக பணியாற்றினார். இதன் பொருள் பிசிசிஐயை வழிநடத்தும் மூன்றாவது கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் ஆவார்.
இதுவே முதல் முறை:
🚨 THE NEW BCCI PRESIDENT. 🚨
– Mithun Manhas likely to become the new BCCI president. (Vaibhav Bhola). pic.twitter.com/wEkDKcDObN
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 20, 2025
மிதுன் மன்ஹாஸ் பிசிசிஐ தலைவராக பதவியேற்றால், ஒரு புதிய கிரிக்கெட் வீரர் அந்தப் பதவியை வகிப்பது இதுவே முதல் முறை. அதாவது, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாவிட்டாலும், பிசிசிஐ தலைவராகும் முதல் கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் ஆவார். மிதுன் மன்ஹாஸ் 157 முதல் தர போட்டிகள், 130 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 91 டி20 போட்டிகளில் விளையாடி, உள்நாட்டு கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 15,000 ரன்கள் எடுத்துள்ளார்.
ALSO READ: டாஸ்தான் முதல் டார்க்கெட்! போட்டா போட்டியில் இந்தியா – பாகிஸ்தான்.. இது ஏன் முக்கியம்..?
பிசிசிஐயில் 5 முக்கிய பதவிகள்:
மிதுன் மன்ஹாஸ் பிசிசிஐ தலைவராக வாய்ப்புள்ளது. இவரை தொடர்ந்து, ராஜீவ் சுக்லா பிசிசிஐ துணைத் தலைவராகத் தொடர்வார் என்று நம்பப்படுகிறது. ரகுராம் பட் பொருளாளராகவும், பிரப்தேஜ் பாட்டியா இணைச் செயலாளராகவும், அருண் குமார் துமால் ஐபிஎல் தலைவராகவும் பதவி வகிப்பார். இவர்களைத் தவிர, தேவ்ஜித் சைகியா தொடர்ந்து பிசிசிஐ செயலாளராகவும் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.