IND vs NZ 3rd ODI: நியூசிலாந்துக்கு எதிராக முக்கிய சாதனை.. படைக்க காத்திருக்கும் ரோஹித் – கோலி!

Rohit Sharma - Virat Kohli Records: கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சிறப்பாக செயல்படவில்லை. முதல் போட்டியில் விராட் கோலி 93 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். ஆனால், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 25 ரன்களுக்குள் ஆட்டமிழந்தார்.

IND vs NZ 3rd ODI: நியூசிலாந்துக்கு எதிராக முக்கிய சாதனை.. படைக்க காத்திருக்கும் ரோஹித் - கோலி!

ரோஹித் - கோலி

Published: 

17 Jan 2026 08:19 AM

 IST

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் (IND vs NZ) ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி (Virat Kohli) பல முக்கிய சாதனைகளை முறியடிக்கக்கூடும். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி வருகின்ற 2026 ஜனவரி 18ம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும். இரு அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது.

கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சிறப்பாக செயல்படவில்லை. முதல் போட்டியில் விராட் கோலி 93 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். ஆனால், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 25 ரன்களுக்குள் ஆட்டமிழந்தார். 2023ம் ஆண்டில் ஹோல்கர் ஸ்டேடியத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்ததால், தற்போது ரோஹித் சர்மா மிகப்பெரிய ரன் எண்ணிக்கை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: போட்டிக்கு நடுவே புறா எச்சம்! இந்தியன் ஓபனில் தொடரும் சர்ச்சை.. போட்டி பாதியில் நிறுத்தம்!

நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள்

நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை கோலி கடந்த போட்டியில் முறியடித்து, சச்சின் டெண்டுல்கரை முறியடித்தார். கோலி இப்போது 1,773 ரன்கள் எடுத்துள்ளார். இப்போது, ​​ரோஹித் சர்மா இந்தப் பட்டியலில் வீரேந்திர சேவாக்கை முறியடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இதை சாதனையை எட்ட ரோஹித் சர்மா 35 ரன்கள் மட்டுமே எடுத்தால் போதும். நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர்களின் பட்டியலை தெரிந்து கொள்வோம்.

  1. விராட் கோலி – 1773
  2. சச்சின் டெண்டுல்கர் – 1750
  3. சேவாக் – 1157
  4. ரோஹித் சர்மா – 1123

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் ஜாக்ஸ் காலிஸை ரோஹித் சர்மா முறியடிக்க வாய்ப்புள்ளது. இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள காலிஸ் 11,579 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில், ரோஹித் சர்மா தற்போது 11,566 ரன்கள் எடுத்துள்ளார். காலிஸை முந்த ரோஹித்துக்கு இன்னும் 14 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள்:

ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் விராட் கோலி , ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் வடிவத்தில் வீரேந்தர் சேவாக்குடன் கோலி சமன் செய்துள்ளார். இருவரும் தலா ஆறு சதங்கள் அடித்துள்ளனர். இந்தூரில் கோலி ஒரு சதம் அடித்தால், ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார்.

ALSO READ: நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.. உலகக் கோப்பைக்கு டவுட்..!

ரோஹித் சர்மாவால் அப்ரிடியின் சாதனையை முறியடிக்க முடியுமா?

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி தற்போது 50 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக ரோஹித் சர்மா 49 சிக்சர்கள் அடித்துள்ளார். இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் ரோஹித் இன்னும் இரண்டு சிக்சர்கள் அடித்தால், அப்ரிடியின் சாதனையை முறியடிப்பார்.

"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!
சீனாவில் அடுத்த சாதனை.. neuromorphic ரோபோட்டிக் eskin எப்படி வேலை செய்யும்?
29 கோடி ரூபாய்க்கு ஏலம் போன மீன்.. ஜப்பானின் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..
ஜப்பானில் முடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?