India – England 5th Test: ஓவல் பிட்ச் விவகாரம்! மைதான பராமரிப்பாளரிடம் மோதலில் ஈடுபட்ட கம்பீர்.. என்ன நடந்தது?

Gautam Gambhir-Groundsman Clash: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஓவல் மைதானத்தின் கண்காணிப்பாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மைதானப் பணியாளர், பயிற்சி அமர்வின் போது ஆடுகளத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் இருக்குமாறு கூறியதால் இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.

India - England 5th Test: ஓவல் பிட்ச் விவகாரம்! மைதான பராமரிப்பாளரிடம் மோதலில் ஈடுபட்ட கம்பீர்.. என்ன நடந்தது?

வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுதம் கம்பீர்

Published: 

30 Jul 2025 11:16 AM

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது (India – England 5th Test) மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் (Indian Cricket Team) தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் (Gautam Gambhir), லண்டலில் உள்ள ஓவல் ஸ்டேடியத்தின் கண்காணிப்பாளரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தற்போது, இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் இந்தியாவின் பயிற்சி அமர்வின்போது நடந்ததாக கூறப்படுகிறது. வைரலான வீடியோவில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர், மைதான பணியாளர் லீஃபோர்டிஸ்டம், “ நீங்கள் இங்கே வெறும் மைதான பணியாளர்தான்” என்று கூறியதாக கூறப்படுகிறது.

எதனால் இந்த சண்டை..?


பேச்சுவார்த்தையாக ஆரம்பித்து பின்னர் வாக்குவாதமாக அதிகரித்தபோது, கம்பீர் ஃபோர்டிஸிடம், “ போ நீ எங்கு என்ன வேண்டுமானாலும் புகாரளிக்க விரும்புகிறாயோ அதை செய், நீ வெறும் ஒரு மைதான பணியாளர்தான்” என்றார். கம்பீர் மற்றும் ஃபோர்டிஸ் இடையே ஒரு சூடான வாக்குவாதம் ஏற்பட்டவுடன், பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் வந்து தலையிட்டார். கம்பீர் தூரத்திலிருந்து வாக்குவாதத்தைத் தொடர்ந்தபோது, அவர் பிட்ச் கியூரேட்டரை தூரமாக அழைத்து சென்றார். இருப்பினும், கம்பீர் பலமுறை விரல்களை நீட்டி மைதான ஊழியர்களை நோக்கி கத்திக் கொண்டிருந்தார்.

ALSO READ: இந்திய அணியின் 5வது டெஸ்ட் லெவன்.. பண்ட் இடத்திற்கு யார்? பும்ரா விளையாடுவாரா?

என்ன நடந்தது..?


இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக், கம்பீர் மற்றும் ஃபோர்டிஸ் இடையேயான வாக்குவாதம் எப்படி, எப்போது நடந்தது என்பது குறித்து விளக்கினார். அப்போது, “நாங்கள் ஆடுகளத்தை பாக்கும்போது, அவர்கள் எங்களை இரண்டரை மீட்டர் தொலைவில் நின்று பார்க்க சொன்னார்கள். நாங்கள் ஜாகர்ஸ் என்று அழைக்கப்படும் ரப்பர் ஸ்பைக்களை அணிந்திருந்தோம். இதனால், பிட்ச் எந்த சேதமும் அடையாது என்பது எங்களுக்கு தெரியும்.

அதேநேரத்தில், ஒருநாள் முன்னதாக, இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் ராப் கீ ஆகியோர் சாதாரண உடையில் மைதானத்திற்கு வருகைதந்தனர். ஆனால், அவர்கள் ஆடுகளத்தை ஆய்வு செய்தபோது, ஃபோர்டிஸ் அத்தகைய எந்த அறிவுறுத்தல்களை வழங்கவில்லை, எந்த ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை. இது சற்று அதிர்ச்சியாக இருந்தது.

ALSO READ: ஓவல் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை எப்படி? கடைசியாக எப்போது வென்றது?

அப்போது, மைதான பராமரிப்பாளர் இந்திய அணியின் துணை ஊழியர்களை நோக்கி கத்த தொடங்கினார். கம்பீர் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். இதனால். இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது” என்றார்.