India vs England 3rd Test: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் எப்போது..? எத்தனை மணிக்கு தொடங்கும்..? முழு விவரம் இதோ!

Lords Cricket Ground: இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி ஜூலை 10, 2025 அன்று லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும். சோனி ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சிनेमा-வில் நேரலை. போட்டி நேரம், இடைவேளை நேரங்கள் மற்றும் பார்ப்பதற்கான வழிமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு போட்டிகள் 1-1 என சமநிலையில் உள்ளன.

India vs England 3rd Test: இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் எப்போது..? எத்தனை மணிக்கு தொடங்கும்..? முழு விவரம் இதோ!

இந்தியா - இங்கிலாந்து

Published: 

08 Jul 2025 16:46 PM

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் (India vs England Test Series) கொண்ட டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) தலைமையிலான இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இரு அணிகளுக்கு இடையிலான  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் காரணமாக, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி எப்போது, ​​எங்கு நடைபெறும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

3வது டெஸ்ட் போட்டி எப்போது..?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 ஜூலை 10ம் தேதி லண்டனில் உள்ள மிகவும் புகழ்பெற்ற லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும். போட்டியின் டாஸானது அன்றைய நாளில் பிற்பகல் 3 மணிக்கு போடப்பட்டு யார் முதலில் பேட்டிங் செய்வார்கள் என்பது தெரியவரும். எப்போதும், 2 நாட்களுக்கு முன்பே, அணியை அறிவிக்கும் இங்கிலாந்து அணி இந்த முறை தங்களது அணியில் மாற்றத்தை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இந்த டெஸ்ட் போட்டிக்கான எந்த அணியும் இதுவரை தங்கள் ஆடும் லெவன் அணியை அறிவிக்கவில்லை.

மதிய உணவு மற்றும் தேநீர் இடைவேளை எப்போது..?

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் அமர்வு லார்ட்ஸில் பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும். முதல் அமர்வு இரண்டு மணி நேரம் நடைபெறும். அதாவது, போட்டி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரை நடைபெறும். பின்னர் மதிய உணவு வழங்கப்படும். மதிய உணவு 40 நிமிடங்கள் நடைபெறும். மதிய உணவுக்குப் பிறகு, போட்டி மாலை 6:10 மணிக்கு மீண்டும் தொடங்கும். இப்போது இரண்டாவது அமர்வும் இரண்டு மணி நேரம் நடைபெறும். அதாவது, இரவு 8:10 மணிக்கு தேநீர் இடைவேளை இருக்கும். தேநீர் இடைவேளை 20 நிமிடங்கள் இருக்கும். போட்டி இரவு 8:30 மணிக்கு மீண்டும் தொடங்கும். பின்னர் அன்றைய ஆட்டம் இரவு 10 மணிக்கு முடிவடையும். மழையால் போட்டி தடைபட்டால், நேரத்தை மாற்றலாம். டெஸ்ட் கிரிக்கெட் விதிகளின்படி, ஒரு நாளில் 90 ஓவர்கள் விளையாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியை எப்போது, ​​எதில் பார்க்கலாம்..?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 ஜூலை 10 முதல் ஜூலை 14 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும். இந்த போட்டியை காண விரும்புவோர் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் தொலைக்காட்சியில் நேரடியாக கண்டுகளிக்கலாம். நீங்கள் மொபைல், டேப்லெட் அல்லது லேப்டாப் போன்றவற்றில் காண விரும்பினால் நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி பக்கத்தில் கண்டு மகிழலாம்.