Shubman Gill Records: 10வது சதத்துடன் பல்வேறு சாதனைகள்.. இந்திய அணியின் ரன் மெஷினாக சுப்மன் கில்!

IND vs WI 2nd test Day 2: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 

Shubman Gill Records: 10வது சதத்துடன் பல்வேறு சாதனைகள்.. இந்திய அணியின் ரன் மெஷினாக சுப்மன் கில்!

சுப்மன் கில்

Published: 

11 Oct 2025 17:46 PM

 IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் 2 நாட்களிலும் இந்திய அணி முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) ஆட்டமிழக்காமல் 129 ரன்கள் எடுத்து பல சாதனைகளை முறியடித்தார். இது கேப்டனாக தனது கடைசி 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சுப்மன் கில் அடித்த 5வது சதம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கில்லின் சதத்தால், இந்திய அணி (Indian Cricket Team) முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சுப்மன் கில் 129 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி பல்வேறு சாதனைகளை குவித்தார். அதனை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்.

சுப்மன் கில்லின் 5 பெரிய சாதனைகள்

இந்திய டெஸ்ட் கேப்டனாக ஒரு வருடத்தில் அதிக சதங்கள்:

சுப்மன் கில் இந்திய டெஸ்ட் கேப்டனாக ஆன 7 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் அடித்துள்ளார். இதன்மூலம், ஒரு வருடத்தில் ஒரு இந்திய டெஸ்ட் கேப்டனாக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். விராட் கோலி கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் கேப்டனாக தலா 5 சதங்கள் அடித்துள்ளா. அதேநேரத்தின் கிரிக்கெட் கடவுன் சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக 4 சதங்கள் அடித்துள்ளார்.

ALSO READ: 5 வீரர்களை விடுவிக்க திட்டமிடும் சிஎஸ்கே… இந்த வெளிநாட்டு வீரரும் வெளியேறுகிறாரா..?

சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்:

இதுவே சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராகும். இந்திய மண்ணில் அவரது முந்தைய அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 2023 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் எடுத்த 128 ஆகும். இப்போது அவர் 129 ரன்கள் எடுத்து தனது சொந்த தனிப்பட்ட ஸ்கோரை உயர்த்தியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்:

சுப்மன் கில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தற்போது, சுப்மன் கில் 2,826 ரன்கள் எடுத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இதுவரை 2,731 ரன்கள் எடுத்த ரிஷப் பண்டை, தற்போது கில் முந்தியுள்ளார். ரோஹித் சர்மா 2,716 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், விராட் கோலி 2,617 ரன்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

பாபர் அசாம் சாதனை முறியடிப்பு:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒரு கேப்டனாக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பாபர் அசாம் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை சுப்மான் கில் முந்திச் சென்றுள்ளார். கில் இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5 சதங்களை அடித்துள்ளார். அதே நேரத்தில் ரோஹித் சர்மா மற்றும் பாபர் அசாம் ஆகியோர் கேப்டன்களாக தலா 4 சதங்களை அடித்துள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் எட்டு முறை கேப்டனாக 100 ரன்கள் எடுத்த ஜோ ரூட் அதிக சதங்கள் அடித்த சாதனையைப் படைத்துள்ளார்.

ALSO READ: பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம கிஃப்ட்! புது காதலியை அறிமுகம் செய்த ஹர்திக் பாண்ட்யா!

ஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் சதங்கள்:

சுப்மான் கில் ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர்களில் சுனில் கவாஸ்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரை சமன் செய்துள்ளார். ஒரே ஆண்டில் 5 டெஸ்ட் சதங்கள் அடித்த சாதனையையும் கில் படைத்துள்ளார். இருப்பினும், ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த இந்திய சாதனை சச்சின் டெண்டுல்கரின் வசம் உள்ளது. சச்சின் கடந்த 2010ம் ஆண்டு 7 சதங்கள் அடித்தார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.