IND vs SA 5th T20: கடைசி போட்டியில் கதிகலங்கிய தென்னாப்பிரிக்கா.. தொடரை வென்ற இந்திய அணி..!

Ind Vs Sa 5th T20 Result: 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. 

IND vs SA 5th T20: கடைசி போட்டியில் கதிகலங்கிய தென்னாப்பிரிக்கா.. தொடரை வென்ற இந்திய அணி..!

இந்திய கிரிக்கெட் அணி

Updated On: 

19 Dec 2025 23:15 PM

 IST

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி (IND vs SA 5th T20) இன்று அதாவது 2025 டிசம்பர் 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 231 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) வெறும் 16 பந்துகளில் அரைசதம் அடித்தார். சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்காக இரண்டாவது வேகமான அரைசதம் அடித்த சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார். தொடர்ந்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. இந்திய அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

ALSO READ: 2025ம் ஆண்டில் அடித்த லக்.. சாம்பியன் பட்டத்தை குவித்த இந்திய அணியினர்!

இந்திய அணி முதலில் பேட்டிங்:

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் இல்லாத நிலையில், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து சஞ்சு சாம்சன் இன்னிங்ஸைத் தொடங்கினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முழுத் தொடரின் முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை சாம்சன் பெற்று, 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவும் 34 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து உள்ளே வந்த ஹர்திக் பாண்ட்யா 25 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து 16 பந்துகளில் அரைசதத்தை கடக்க, திலக் வர்மாவும் 42 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து இந்திய அணியை 231 ரன்களுக்கு அழைத்து சென்றனர்.

232 ரன்கள் இலக்கு:


232 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா, குயின்டன் டி காக் சிறப்பான தொடக்கத்தை அளிக்க, ஹென்ட்ரிக்ஸ் வெறும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டி காக்கின் அதிரடி ஆட்டத்தால், தென்னாப்பிரிக்கா பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்தது. தொடர்ச்சியாக தென்னாப்பிரிக்கா 10 ஓவர்களில் 118 ரன்களை எட்டியிருந்தது.

ALSO READ: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. இந்த நாளில் அணியை அறிவிக்கும் பிசிசிஐ!

அப்போது 11வது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா, டி காக்கை 65 ரன்களில் ஆட்டமிழக்க செய்ய, தென்னாப்பிரிக்கா அணி அடுத்த ஐந்து ஓவர்களில் 38 ரன்களை மட்டுமே எடுத்தது. தொடர்ந்து, வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்துவீசி 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதன்மூலம், வருண் சக்ரவர்த்தி இந்த 2025ம் ஆண்டு டி20 போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கும் சாய் பல்லவி?
ஜிம்மில் பயிற்சி செய்தபோது திடீரென பார்வை இழந்த 27 வயது இளைஞர்