Jaiswal Century: ஒருநாள் வரலாற்றில் முதல் சதம்.. முத்திரை பதித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
Yashasvi Jaiswal hits 1st Century: இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காயமடைந்ததால், இந்தத் தொடரில் இன்னிங்ஸைத் தொடக்க இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு முன்பு, அவர் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடிய அனுபவம் உள்ளது. தனது முதல் ஒருநாள் போட்டிக்குப் பிறகு, ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் (IND vs SA 3rd ODI) இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் முதல் மற்றும் இரண்டாவது போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ஜெய்ஸ்வால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அதேநேரத்தில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 3வது ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் இப்போட்டியில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிக்கத் தொடங்கி, 36வது ஓவரில் 111 பந்துகளில் தனது சதத்தை எட்டினார்.
ALSO READ: குல்தீப் எடுத்த முக்கிய விக்கெட்.. குஷியில் கோலி க்யூட் நடனம்..!
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காயமடைந்ததால், இந்தத் தொடரில் இன்னிங்ஸைத் தொடங்க இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு முன்பு, அவர் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடிய அனுபவம் உள்ளது. தனது முதல் ஒருநாள் போட்டிக்குப் பிறகு, ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்த தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தபோது, அவருக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. முதல் போட்டியில் 18 ரன்களும், இரண்டாவது போட்டியில் 22 ரன்களும் மட்டுமே எடுத்தார். ஆனால், மூன்றாவது போட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு அற்புதமான சதத்தை அடித்ததன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
ALSO READ: 20 போட்டிகளில் டாஸ் லாஸ்.. இந்திய அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்! கடைசியாக வென்ற கே.எல்.ராகுல்!
மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த இந்தியர்கள்:
Look at what it means to him! 🥳
What a special knock this has been from Yashasvi Jaiswal 🙌
Updates ▶️ https://t.co/HM6zm9o7bm#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/BHyNjwOGWY
— BCCI (@BCCI) December 6, 2025
யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதற்கு முன்பு டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்துள்ளார். இப்போது, தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையின் 4வது போட்டியில், ஒருநாள் சதம் அடித்த சாதனையை ஜெய்ஸ்வால் அடைந்துள்ளார். இதற்கு முன்பு, விராட் கோலி , ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சுரேஷ் ரெய்னா மற்றும் சுப்மான் கில் ஆகிய ஐந்து இந்திய வீரர்கள் மட்டுமே மூன்று வடிவங்களிலும் சதம் அடித்துள்ளனர். ஜெய்ஸ்வால் இந்த சாதனையை நிகழ்த்திய ஆறாவது இந்தியர் ஆவார்.