IND vs SA 1st T20: அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா நம்பிக்கை.. 175 ரன்களை தொட்ட இந்திய அணி!

IND vs SA 1st T20 Score: இந்திய அணிக்கு தொடங்கும்போது அதிரடியாக ரன்களை சேர்க்கும் அபிஷேக் சர்மா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரைத் தவறவிட்ட பிறகு திரும்பிய சுப்மன் கில், வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

IND vs SA 1st T20: அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா நம்பிக்கை.. 175 ரன்களை தொட்ட இந்திய அணி!

ஹர்திக் பாண்ட்யா

Updated On: 

09 Dec 2025 21:18 PM

 IST

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (IND vs SA) இடையிலான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 59 ரன்கள் எடுத்து இந்திய அணி (Indian Cricket Team) 170 ரன்களை கடக்க உதவி செய்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் அதிக ரன்களை எடுக்கத் தவறிவிட்டனர். இதற்கிடையில், தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி 3 இந்திய பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணியை சோதித்தார்.

ஏமாற்றம் அளித்த தொடக்க வீரர்கள்:

இந்திய அணிக்கு தொடங்கும்போது அதிரடியாக ரன்களை சேர்க்கும் அபிஷேக் சர்மா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரைத் தவறவிட்ட பிறகு திரும்பிய சுப்மன் கில், வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவின் தோல்வி தொடர்கிறது. சூர்யகுமார் யாதவ் களமிறங்கிய உடனேயே ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் மூலம் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தார். இதன்பிறகு, 12 ரன்களுடன் அதிரடியாக விளையாட முயற்சித்து ஆட்டமிழந்தார்.

ALSO READ: 3 கேப்டன்கள்.. 3 தோல்விகள் மட்டுமே! 2025ல் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி எப்படி?

சிறிது நேரத்திலேயே, இந்திய அணி 48 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்த நிலையில், திலக் வர்மா மற்றும் அக்சர் படேல் முறையே 23 மற்றும் 26 ரன்கள் எடுத்து வெளியேறினர். இருப்பினும், இவர்கள் இருவரும் இந்த ரன்களை எடுக்க அதிக பந்துகளை எடுத்து கொண்டதால் இந்தியாவின் ரன் விகிதத்தை கணிசமாகக் குறைந்தது.

கலக்கிய ஹர்திக் பாண்ட்யா:


ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் செய்ய வந்தபோது, ​​இந்தியா 11.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ரன் விகிதம் 6க்கு மேல் இருந்ததால், அணி 150 ரன்களை எட்ட முடியும் என்ற சூழலும் நிலவியது. அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவம் துபே, வெறும் 11 ரன்கள் எடுத்த பிறகு ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்ட்யா இந்தியாவுக்காக ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 28 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்தார்ல். ஒரு கட்டத்தில், இந்தியா 12 ஓவர்களில் 80 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், ஹர்திக் பாண்ட்யாவின் அரைசதத்தால், இந்திய கிரிக்கெட் அணி கடைசி 8 ஓவர்களில் 95 ரன்கள் சேர்த்தது.

ALSO READ: இந்திய ரசிகர்களுக்கு பல இடியை கொடுத்த தருணங்கள்.. 2025ல் ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள்..!

மறுபுறம், தென்னாப்பிரிக்கா சார்பாக லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளையும், லுத்தோ சிபாம்லா 2 விக்கெட்டுகளையும், டொனோவன் ஃபெரீரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

குளிர்கால ஆடைகளை எப்படி ஃபேஷன் ஸ்டேட்மெண்டாக மாற்றுவது.. நடிகர்களின் தேர்வு என்ன?
சீனப் பெண்ணுக்கும் இந்திய இளைஞனுக்கும் நடந்த திருமணம்.. இணையத்தில் வைரலாகும் காதல் கதை..
25கிலோ மீட்டர் தான் தூரம்.. சகோதரனை ஹெலிகாப்டரில் வந்து அழைத்துச் செல்லும் சகோதரி!!
கோஹலி மற்றும் ரோகித் இல்லாமல், 2027 உலகக் கோப்பையை வெல்ல முடியாது - முகமது கைஃப்..