IND vs SA 1st T20: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20.. யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..?
IND vs SA T20 Match Prediction: இந்திய அணி மற்ற வடிவங்களை காட்டிலும் டி20 வடிவத்தில் சிறந்த ஃபார்மில் உள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 4 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. 2025ம் ஆண்டில் இந்திய அணி 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில் இரண்டில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (IND vs SA) அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று அதாவது 2025 டிசம்பர் 9ம் தேதி கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி (Indian Cricket Team) ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வருகிறது. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இப்போது, சூர்யகுமார் யாதவ் தலைமையில், இந்திய அணி டி20 தொடரை வெல்ல கடுமையாக போராடும். ஆனால், அதேநேரத்தில் ஐடன் மார்க்ரமின் தென்னாப்பிரிக்கா அணி எளிதாக புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இன்று கட்டாக்கில் எந்த அணி வெல்லக்கூடும் என்பதைக் கண்டறியவும்.




நேருக்கு நேரில் யார் ஆதிக்கம்..?
T20I Series ready 💪#TeamIndia is geared 🆙 #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/xZjIITGDcS
— BCCI (@BCCI) December 8, 2025
இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான டி20 போட்டிகளை பொறுத்தவரை, இதுவரை இரு அணிகளும் 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இந்திய அணி அதிகபட்சமாக 18 முறையும், தென்னாப்பிரிக்கா அணி 12 முறையும் வென்றுள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் இடையே நடந்த கடைசி 6 டி20 போட்டிகளில் இந்தியா 5 போட்டிகளில் வென்றுள்ளது.
இரு அணிகளின் சமீபத்திய ஃபார்ம் எப்படி?
இந்திய அணி மற்ற வடிவங்களை காட்டிலும் டி20 வடிவத்தில் சிறந்த ஃபார்மில் உள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 4 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. 2025ம் ஆண்டில் இந்திய அணி 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில் இரண்டில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. மறுபுறம், தென்னாப்பிரிக்க அணி 2025ம் ஆண்டு 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. 5 வெற்றியையும், 9 தோல்வியையும் சந்தித்துள்ளது. மேலும் இதன் கடைசி 5 டி20 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. கடைசியாக இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் ஒரு டி20 போட்டியில் சந்தித்தபோது, இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
ALSO READ: முதல் டி20யில் மோதும் IND vs SA.. இதுவரை ஹெட் டூ ஹெட்டில் யார் ஆதிக்கம்?
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் பராபதி ஸ்டேடியத்தில் 2 முறை டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இரண்டு முறையும் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.