IND vs NZ: இந்தியா vs நியூசிலாந்து 3வது ஒருநாள் போட்டி.. மாணவருக்கு சிறப்பு சலுகை அளித்த பிசிசிஐ!

Holkar Cricket Stadium: இந்திய தேர்வுக்குழு புத்தாண்டிலேயே அணியைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்திய தேர்வுக்குழு இந்திய அணி அறிவிப்பை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபிதான். இந்த உள்நாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதைப் பார்த்த பின்னரே அணியை இந்திய தேர்வாளர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

IND vs NZ: இந்தியா vs நியூசிலாந்து 3வது ஒருநாள் போட்டி.. மாணவருக்கு சிறப்பு சலுகை அளித்த பிசிசிஐ!

ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியம்

Published: 

01 Jan 2026 08:00 AM

 IST

புதிய உற்சாகத்துடன் இந்திய அணி (Indian Cricket Team) 2026ம் ஆண்டில் புத்தாண்டில் நுழைகிறது. 2026ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடவுள்ளது. ஆனால் அதற்கு முன், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருடன் (IND vs NZ) இந்தியா இந்த 2026ம் ஆண்டைத் தொடங்குகிறது. இந்தியா – நியூசிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் 3வது போட்டி மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறும். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியை காண வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கார்ப்பரேட்டுகள் அல்லது ஸ்பான்சர்கள் மூலம் முன்பதிவு செய்யப்படுகின்றன.

இருப்பினும், இந்தியா – நியூசிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில், மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கம் ஹோல்கர் ஸ்டேடியத்தில் மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்காக அவர்களுக்கு ஸ்டேடியத்தின் சில சிறப்புப் பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஸ்டாண்ட் டிக்கெட்டுகள் மாணவர்களுக்கு குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. அதன்படி, ஒவ்வொரு மாணவரும் ஒரு டிக்கெட்டை மட்டுமே வாங்க முடியும். கிழக்கு ஸ்டாண்ட் லோயர் டிக்கெட் விலை ரூ.750, மூன்றாவது மாடி டிக்கெட் விலை ரூ.950க்கு விற்கப்படுகிறது.

ALSO READ: 2026ல் ரோஹித் – கோலி எத்தனை சர்வதேச போட்டிகளில் விளையாடுவார்கள்..? முழு விவரம் இங்கே!

மாற்றுத்திறனாளிகளுக்கு டிக்கெட் விலை என்ன..?


மாற்றுத்திறனாளிகளுக்கு டிக்கெட் விலை ரூ.300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வடகிழக்கு கேலரி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரிவுகளைத் தவிர, மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான அனைத்து வகையான டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான பொது டிக்கெட்டுகளுக்கான குறைந்தபட்ச விலை ரூ.800 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.7,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து இடையிலான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டி20 தொடருக்கான அணியை அறிவித்துள்ள இந்திய அணி, ஒருநாள் தொடருக்கான அணியை இன்னும் அறிவிக்கவில்லை.

இந்திய அணி அறிவிப்பு எப்போது ?

இந்திய தேர்வுக்குழு புத்தாண்டிலேயே அணியைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்திய தேர்வுக்குழு இந்திய அணி அறிவிப்பை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபிதான். இந்த உள்நாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதைப் பார்த்த பின்னரே அணியை இந்திய தேர்வாளர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ரிஷப் பண்ட் விளையாடுவாரா..?

இந்தியா – நியூசிலாந்து இடையிலான ஒருநாள் தொடரில் இருந்து ரிஷப் பண்ட் நீக்கப்படலாம் என்ற தகவல்கள் உள்ளன. ஒருநாள் போட்டிகளில் தனது முதல் தேர்வு கீப்பர்-பேட்ஸ்மேன் வாய்பை பண்ட், கே.எல். ராகுலின் பார்ம் காரணமாக தவறவிட்டார். சில நாட்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் இந்திய அணியில் இருந்தபோதிலும், அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது அவர் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ: அதிவேகமாக எடை குறைந்த ஷ்ரேயாஸ் ஐயர்.. பிசிசிஐ சிறப்பு கவனம்.. இந்திய அணிக்காக விளையாடுவாரா?

பண்ட் இடத்தை யாரால் மாற்ற முடியும்? தற்போதைய தகவலின்படி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டாவது கீப்பர்-பேட்ஸ்மேனாக பண்ட் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு இஷான் கிஷானுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில்.. ஒருவர் பரிதாப பலி.. 2 ஏசி பெட்டிகள் தீயில் நாசம்!
டெல்லி குண்டுவெடிப்பில் 40 கிலோ உயர்தர வெடிப்பொருட்கள் - அமித் ஷா பகீர் குற்றச்சாட்டு
சோகத்தில் முடிந்த ஹனிமூன்.. புதுமண தம்பதி தனித்தனியே தற்கொலை!
தவறாக பயன்படுத்தப்படும் ‘ஆன்டிபயாடிக்’.. வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தல் என எச்சரிக்கும் மருத்துவர்கள்..