Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs AUS 2nd T20: இந்தியா – ஆஸ்திரேலியா 2வது டி20யிலும் மழையா..? போட்டி மீண்டும் ரத்து செய்யப்படுமா?

IND vs AUS 2nd T20 Weather Update: மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வானிலை மேகமூட்டமாக இருந்தால், பந்து வீச்சாளர்கள் போதுமான அளவு சுழலக்கூடும். எனவே, இரு அணிகளும் வானிலை மற்றும் ஆடுகள நிலைமைகளின் அடிப்படையில் தங்கள் உத்திகளைத் திட்டமிடுவது முக்கியம்.

IND vs AUS 2nd T20: இந்தியா – ஆஸ்திரேலியா 2வது டி20யிலும் மழையா..? போட்டி மீண்டும் ரத்து செய்யப்படுமா?
மிட்செல் மார்ஷ் - சூர்யகுமார் யாதவ்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Oct 2025 12:04 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி ஏற்கனவே மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி (Ind vs Aus 2nd T20) இன்று அதாவது 2025 அக்டோபர் 31ம் தேதி மதியம் 1.30 மணிக்கு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற உள்ளது. கான்பெராவில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் போட்டி மழையால் தகர்ந்தது போல, அதே அச்சுறுத்தல் இப்போது மெல்போர்னிலும் நிலவுகிறது. வானிலை அறிக்கைகளின்படி, 2025 அக்டோபர் 31ம் தேதியான இன்று மெல்போர்னில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது போட்டியை மீண்டும் ஒருமுறை பாதிக்கலாம்.

ALSO READ: ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மாஸ்.. உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனானார் ரோஹித் சர்மா..!

மெல்போர்னில் வானிலை வில்லனா..?

முதல் டி20 போட்டியில் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது. அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியான இன்னிங்ஸ்களை விளையாடினார்கள். இதன் காரணமாக இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 9.4 ஓவர்களுக்கு 97 ரன்கள் எடுத்தபோது மழை ஆட்டத்தை நிறுத்தியது. இதன் காரணமாக, மெல்போர்னில் முழு போட்டியையும் காண இருநாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் AccuWeather மழையானது போட்டியை பாதிக்கும் என தெரிவித்துள்ளது.

AccuWeather அறிக்கையின்படி, 2025 அக்டோபர் 31ம் தேதியான இன்று மெல்போர்னில் மழை பெய்ய 87% வாய்ப்பு உள்ளது. மேலும், நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய 17% வாய்ப்பு உள்ளது. போட்டி உள்ளூர் நேரப்படி காலை 9:15 மணிக்கு தொடங்கும். அதே நேரத்தில் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கும். சுவாரஸ்யமாக, பிற்பகலில் மழை பெய்ய வாய்ப்பு, அதாவது போட்டியின் போது, ​​70% க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக 1.4 மிமீ மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மெல்போர்ன் மைதானம் எப்படி இருக்கும்?


மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் எப்போதுமே பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமான இடமாக இருந்து வருகிறது. பெரிய பவுண்டரி லைன் காரணமாக பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்களை அடித்து விளையாடுவது கடினம். இருப்பினும், சமீபத்தில், பிக் பாஷ் லீக்கில் (பிபிஎல்) இந்த ஸ்டேடியம் அதிக ஸ்கோர்களைக் கண்டுள்ளது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் போன்ற பந்துகளை இந்திய அணி சிறப்பாக கையாண்டால் இது நல்ல ஸ்கோருக்கு வழிவகுக்கும்.

வானிலை மேகமூட்டமாக இருந்தால், பந்து வீச்சாளர்கள் போதுமான அளவு சுழலக்கூடும். எனவே, இரு அணிகளும் வானிலை மற்றும் ஆடுகள நிலைமைகளின் அடிப்படையில் தங்கள் உத்திகளைத் திட்டமிடுவது முக்கியம்.

ALSO READ: கில், சூர்யகுமார் யாதவின் அதிரடி வீண்.. மழையால் ரத்தான இந்தியா – ஆஸ்திரேலிய முதல் டி20!

போட்டிகளை எப்போது, ​​எங்கே, எப்படி நேரடிப் பார்ப்பது..?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று அதாவது 2025 அக்டோபர் 31ம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) நடைபெறும்.

  • இந்திய நேரப்படி போட்டி நேரம்: பிற்பகல் 1:45 மணி
  • நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்
  • ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப்