Ind vs Aus 1st T20: கில், சூர்யகுமார் யாதவின் அதிரடி வீண்.. மழையால் ரத்தான இந்தியா – ஆஸ்திரேலிய முதல் டி20!
India vs Australia 1st T20: கான்பெராவில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டியில் மழை ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. போட்டி சரியான நேரத்தில் தொடங்கினாலும், 6வது ஓவரில் மழை பெய்து ஆட்டம் அரை மணி நேரம் தடைபட்டது. பின்னர் போட்டி தலா 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
கான்பெராவில் மழை பெய்ததால் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி (India vs Australia 1st T20) ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக, 58 பந்துகள் மட்டுமே இந்திய அணியால் விளையாட முடிந்தது. 58 பந்துகளில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை மழைக்கு நடுவே மழையாக பொழிந்தனர். இருப்பினும் 10வது ஓவரில், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. மழை நிற்க சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்தபோது, மழை நிற்காததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ALSO READ: விராட் – ரோஹித் விளையாடுவதை அடுத்து எப்போது காணலாம்..? கிடைத்த சூப்பர் அப்டேட்!




ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை ஆட்டம் காண வைத்த சூர்யா – கில்:
The first #AUSvIND T20I has been abandoned due to rain. 🌧️
Scorecard ▶️ https://t.co/VE4FvHBCbW#TeamIndia pic.twitter.com/biJYDFe9Ah
— BCCI (@BCCI) October 29, 2025
கான்பெராவில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டியில் மழை ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. போட்டி சரியான நேரத்தில் தொடங்கினாலும், 6வது ஓவரில் மழை பெய்து ஆட்டம் அரை மணி நேரம் தடைபட்டது. பின்னர் போட்டி தலா 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. மழைக்குப் பிறகு போட்டி மீண்டும் தொடங்கியபோது, சூர்யகுமார் யாதவும், சுப்மன் கில்லும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்யத் தொடங்கினர். இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் திடீரென்று, 10வது ஓவரில் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியது, போட்டி மீண்டும் தொடங்குவதைத் தடுத்தது. மழை தொடங்கியபோது, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 24 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் எடுத்திருந்தார். அதேநேரத்தில், சுப்மன் கில் 20 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்திருந்தார். இதன் காரணமாக இந்திய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்தது.
மேலும், தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 14 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நாதன் ஆலன் பந்தில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா அணிக்காக, ஜோஷ் ஹேசில்வுட் 3 ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மேத்யூ குன்ஹெமான் 2 ஓவர்களில் 22 ரன்கள், மார்கஸ் ஸ்டெய்னிஸ் 1 ஓவரில் 10 ரன்கள், நாதன் எல்லிஸ் 1.4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்தனர். சேவியர் பார்ட்லெட் 2 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
ALSO READ: ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மாஸ்.. உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனானார் ரோஹித் சர்மா..!
இந்தியா – ஆஸ்திரேலியா 2வது டி20 எப்போது..?
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் வருகின்ற 2025 அக்டோபர் 31ம் தேதி 2வது டி20 போட்டியில் மோதுகிறது. இந்த போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது.