IND A vs SA A: மாயமான காயம்! இந்திய அணிக்கு கேப்டனாக திரும்பும் ரிஷப் பண்ட்..! எப்போது தெரியுமா?
India A vs South Africa A: இந்தியா ஏ vs தென்னாப்பிரிக்கா ஏ தொடர் மூலம் மீண்டும் கிரிக்கெட் உலகில் களமிறங்க ரிஷப் பண்ட் தயாராக உள்ளார் . இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் பண்ட்க்கு காலில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தால் பண்ட் கிட்டத்தட்ட 2 மாதங்கள் அணியில் இருந்து விலக வேண்டியிருந்தது.

ரிஷப் பண்ட்
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் (IND vs AUS) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடும். அதன் பிறகு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடும். அதற்கு முன், இந்தியா ஏ அணிக்கும் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கும் இடையே 2 போட்டிகள் கொண்ட 4 நாள் போட்டி நடைபெறவுள்ளது. இந்த 2 போட்டிகளுக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், ஆச்சர்யப்படும் விதமாக ரிஷப் பண்ட் (Rishabh Pant) கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிஷப் பண்ட்க்கு முன்னுரிமை:
4 நாட்கள் நடைபெறும் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2 போட்டிகளிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அணியை வழிநடத்துவார் என்றும், சாய் சுதர்ஷனுக்கு துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், சர்பராஸ் கான் உள்ளிட்ட சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ALSO READ: அடுத்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிப்பார்கள்… ரோகித் சர்மா – விராட் கோலிக்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு
முதல் போட்டி எங்கே?
இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் வருகின்ற 2025 அக்டோபர் 30ம் தேதி முதல் தொடங்குகிறது. இதில், முதல் போட்டியானது வருகின்ற 2025 அக்டோபர் 30 முதல் 2025 நவம்பர் 2 வரை நடைபெறும். இரண்டாவது மற்றும் இறுதிப் போட்டி 2025 நவம்பர் 6 முதல் 9 வரை நடைபெறும். இந்த இரண்டு போட்டிகளும் பெங்களூருவில் உள்ள BCCI COE மைதானத்தில் நடைபெறும்.
காயத்திற்குப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பும் பண்ட்:
🚨 News 🚨
India A squad for four-day matches against South Africa A announced
Details 🔽
— BCCI (@BCCI) October 21, 2025
இதற்கிடையில், இந்தியா ஏ vs தென்னாப்பிரிக்கா ஏ தொடர் மூலம் மீண்டும் கிரிக்கெட் உலகில் களமிறங்க ரிஷப் பண்ட் தயாராக உள்ளார் . இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் பண்ட்க்கு காலில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தால் பண்ட் கிட்டத்தட்ட 2 மாதங்கள் அணியில் இருந்து விலக வேண்டியிருந்தது. ஆனால் இப்போது பண்ட் விரைவில் களமிறங்க உள்ளார். மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் பண்ட்-டிற்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
ALSO READ: ரோஹித்துக்கு எதிராக மணிக்கு 176.5 கிமீ வேகத்தில் பந்து வீசினாரா ஸ்டார்க்? வைராகும் புகைப்படம்!
இந்தியா ஏ vs தென்னாப்பிரிக்கா ஏ தொடர் அட்டவணை:
- முதல் போட்டி, 2025 அக்டோபர் 30 முதல் 2025 நவம்பர் 2 வரை, BCCI CoE
- இரண்டாவது போட்டி, 2025 நவம்பர் 6-9, BCCI CoE
முதல் 4 நாள் போட்டிக்கான இந்திய ஏ அணி:
ரிஷப் பண்ட் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மத்ரே, என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்ஷன் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதார், அன்ஷுல் கம்போஜ், யாஷ் தாக்கூர், ஆயுஷ் பதோனி மற்றும் சரண்ஷ் ஜெயின்.
இரண்டாவது மற்றும் கடைசி 4 நாள் போட்டிக்கான இந்தியா ஏ அணி:
ரிஷப் பண்ட் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்ஷன் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரிதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதர், கலீல் அகமது, குர்னூர் ப்ரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.