IND U19 vs PAK U19: அண்டர்-19 உலகக் கோப்பையில் மோதும் இந்தியா – பாகிஸ்தான்.. போட்டி எப்போது, எங்கு நடைபெறும்?

India U19 vs Pakistan U19 World Cup 2026: இந்தியாவும் பாகிஸ்தானும் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் குரூப் 2 இல் உள்ளன. ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி முன்னதாக, கடந்த 2026 ஜனவரி 27ம் தேதி ஜிம்பாப்வே 19 வயதுக்குட்பட்டோர் அணியை எதிர்கொண்டு 204 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

IND U19 vs PAK U19: அண்டர்-19 உலகக் கோப்பையில் மோதும் இந்தியா - பாகிஸ்தான்.. போட்டி எப்போது, எங்கு நடைபெறும்?

இந்தியா U19 Vs பாகிஸ்தான் U19

Published: 

29 Jan 2026 13:30 PM

 IST

2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) வருகின்ற 2026 பிப்ரவரி 7ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி கொழும்பில் நடைபெறும். இருப்பினும், அதற்கு முன், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முக்கியமான போட்டி நடைபெறுகிறது. ஆனால், இந்த போட்டி அண்டர்-19 உலகக் கோப்பையின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு (India U19 vs Pakistan U19) இடையே வருகின்ற 2026 பிப்ரவரி 1ம் தேதி நடைபெறுகிறது. இரு அணிகளும் சூப்பர்-6 சுற்றுக்குள் நுழைந்து இப்போது ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் இரு அணிகளும் வெவ்வேறு குழுக்களில் இருந்ததால், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறவில்லை.

ALSO READ: விரைவில் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடரா? ராஜீவ் சுக்லா பதில்!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது நடைபெறும்?

இந்தியாவும் பாகிஸ்தானும் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் குரூப் 2 இல் உள்ளன. ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி முன்னதாக, கடந்த 2026 ஜனவரி 27ம் தேதி ஜிம்பாப்வே 19 வயதுக்குட்பட்டோர் அணியை எதிர்கொண்டு 204 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய அணிக்கு பழிவாங்க ஒரு வாய்ப்பு…

இந்தப் போட்டியில், U-19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பழிவாங்கும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைக்கும். முன்னதாக, 2025 U-19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி பட்டத்தை வென்றது. இந்தப் போட்டியில், பாகிஸ்தானின் சமீர் அகமது மின்ஹாஸ் 172 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். இருப்பினும், இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் காரணமாக, பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி ஆதிக்கம் செலுத்த மிகப்பெரிய வாய்ப்புள்ளது.

ALSO READ: ஜிம்பாப்வேக்கு பயம் காட்டிய இந்திய அணி.. சூப்பர் 6 சுற்றில் அசத்திய ஆயுஷ் மத்ரே படை!

இந்திய U-19 உலகக் கோப்பை 2026 அணி :

ஆயுஷ் மத்ரே (கேப்டன்), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், டி. தீபேஷ், முகமது எனான், ஆரோன் ஜார்ஜ், அபிக்யான் குண்டு, கிஷன் குமார் சிங், விஹான் மல்ஹோத்ரா, உத்தவ் மோகன், ஹெனில் படேல், கிலன் ஏ. படேல், ஹர்வன்ஷ் சிங், வைபவ் சூர்யவன்ஷி, வேதாந்த் திரிவேதி

பாகிஸ்தான் U-19 உலகக் கோப்பை 2026 அணி :

ஃபர்ஹான் யூசுப் (கேப்டன்), உஸ்மான் கான், அப்துல் சுபான், அஹ்மத் ஹுசைன், அலி ஹசன் பலோச், அலி ராசா, டேனியல் அலி கான், ஹம்சா ஜாஹூர், ஹுசைஃபா அஹ்சன், மொமின் கமர், முகமது சயாம், முகமது ஷயான், நிகாப் ஷபிக், சமீர் மின்ஹாஸ், உமர் மின்ஹாஸ்.

காத்திருப்பு வீரர்கள்: அப்துல் காதர், பர்ஹானுல்லா, ஹசன் கான், இப்திசம் அசார், முகமது ஹுசைஃபா

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த அழிந்துபோன பாம்பு இனம்
போர் சூழல்.. பதிலளிக்க தயாராக இருக்கும் ஈரான்..
மீண்டும் ஒரே மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் - விஜய் சேதுபதி.. எங்கு தெரியுமா?
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்.. சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்..