Yashasvi Jaiswal: மூன்று வடிவத்திலும் டாப் 10..! இடமில்லாமல் தவிக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.. டி20 தரவரிசை அப்டேட்!

ICC T20 Rankings: சமீபத்திய ICC T20 தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னணியில் உள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் டாப் 10 இடம்பிடித்திருந்தாலும், 2025 ஆசியக் கோப்பை அணியில் இடம் பெறவில்லை. அவரது சிறப்பான டி20 புள்ளிவிவரங்கள் மற்றும் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளிலும் டாப் 10 இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Yashasvi Jaiswal: மூன்று வடிவத்திலும் டாப் 10..! இடமில்லாமல் தவிக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.. டி20 தரவரிசை அப்டேட்!

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

Published: 

21 Aug 2025 08:16 AM

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) டி20 போட்டிகளுக்கான சமீபத்திய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். முதல் 10 இடங்களில் மொத்தம் 4 இந்திய பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர். இளம் வீரர் அபிஷேக் சர்மா 829 மதிப்பீட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இது தவிர, திலக் வர்மா 804 மதிப்பீட்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) 6வது இடத்திலும் உள்ளனர். அதேநேரத்தில், 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறாத அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) டாப் 10 தரவரிசைக்குள் நுழைந்துள்ளார்.

டாப் 10க்குள் நுழைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்:

இந்தியாவின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது சிறந்த ஆட்டத்தின் அடிப்படையில் ஐசிசி டி20 தரவரிசையில் ஒரு இடம் முன்னேறியுள்ளார். இப்போது அவர் முதல் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 10வது இடத்தை எட்டியுள்ளார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இவ்வளவு சிறப்பான தரவரிசையை பெற்றபோதிலும், 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அவர் காத்திருப்பு வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ALSO READ: மீண்டும் கழட்டிவிடப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்.. கேள்வி எழுப்பிய ரசிகர்கள்.. பிசிசிஐ விளக்கம்..!

சமீபத்திய ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 10 பேட்ஸ்மேன்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே, ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையிலும் டாப் 10 இடங்களில் உள்ளார். இதன்மூலம், 3 வடிவங்களிலும் ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள உலகின் ஒரே பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆவார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டம்:

சமீப காலமாக தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரது ஆக்ரோஷமான பாணி மற்றும் தொடர்ந்து சிறந்த செயல்திறன் அவரை உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஆக்கியுள்ளது. இதுபோன்ற போதிலும், 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். பிசிசிஐயின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பையில் பட்டத்தை வென்ற இந்திய அணியின் முக்கிய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றிருந்தார். ஆனால், பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா..? கேள்வி எழுப்பிய நிருபர்.. செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு!

யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 புள்ளி விவரங்கள்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை இந்திய அணிக்காக 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், ஜெய்ஸ்வால் 36.15 சராசரியுடன் 5 அரைசதங்கள் மற்றும் 1 சதத்துடன் 723 ரன்கள் எடுத்துள்ளார்.

Related Stories
ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் ? பிசிசிஐயின் மாஸ்டர் பிளான்!
Prenelan Subrayen: சந்தேகத்திற்கிடமான பந்துவீச்சு.. அறிமுக போட்டியிலேயே பிரெனலன் சுப்ரியனுக்கு சிக்கல்..!
ICC ODI Rankings: தரவரிசையில் காணாமல் போன ரோஹித், கோலி.. திடீரென ஓய்வா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
India’s Asia Cup 2025 Squad: துணை கேப்டனாக அகர்கரின் முதல் தேர்வாக கில் இல்லையா..? வெளியான ஷாக் ரிப்போர்ட்!
Asia Cup 2025: அதிகபட்சம் மகாராஷ்டிரா! தமிழக வீரருக்கு வாய்ப்பா..? இந்திய அணியில் இடம் பிடித்த மாநில வாரியான வீரர்கள் விவரம்!
Asia Cup 2025: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா..? கேள்வி எழுப்பிய நிருபர்.. செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு!