ICC Men’s T20 World Cup 2026: ஆஹா சொல்ல வைத்த ஐசிசி.. ரூ. 100தான்! 2026 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விவரம் வெளியீடு!

ICC Men's T20 World Cup 2026 Tickets: 2026 டி20 உலகக் கோப்பை நடைபெறும் இந்தியாவில் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ரூ. 100 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இலங்கையில் நடைபெறும் போட்டிகளுக்கான ஆரம்பக்கட்ட டிக்கெட்டின் விலை இந்திய மதிப்பில் ரூ. 300 மட்டுமே ஆகும்.

ICC Mens T20 World Cup 2026: ஆஹா சொல்ல வைத்த ஐசிசி.. ரூ. 100தான்! 2026 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விவரம் வெளியீடு!

2026 உலகக்கோப்பை டிக்கெட்ஸ்

Published: 

11 Dec 2025 19:52 PM

 IST

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை (ICC Men’s T20 World Cup 2026) வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பையின் வடிவம் முதலில் குரூப் ஸ்டேஜில் தொடங்கி, சூப்பர் 8 சுற்று மற்றும் அரையிறுதி நிலை ஆகியவற்றை கடந்து இறுதிப்போட்டியை தொடும். இதன்போது 20 அணிகளுக்கு இடையே மொத்தம் 55 போட்டிகள் நடைபெறவுள்ளது. மற்ற நாடுகள் இந்திய மண்ணில் விளையாடும் சூழலில், அண்டை நாடான பாகிஸ்தான் (Pakistan Cricket Team) மட்டும் தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடும். இந்தநிலையில், 2026 டி20 உலகக் கோப்பை நடைபெறும் இந்தியாவில் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ரூ. 100 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இலங்கையில் நடைபெறும் போட்டிகளுக்கான ஆரம்பக்கட்ட டிக்கெட்டின் விலை இந்திய மதிப்பில் ரூ. 300 மட்டுமே ஆகும்.

ரூ. 100 முதல் தொடங்கும் டிக்கெட் விலை:


இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், ”ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனையை ஐசிசி இன்று அதாவது 2025 டிசம்பர் 11ம் தேதி தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த முக்கிய விளையாட்டு போட்டிகளை அனைத்து மக்களும் வாங்கும் வகையில் குறைந்த ஆரம்ப டிக்கெட் விலையுடன் தொடங்குகிறது. 2026 டி20 உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை இந்திய நேரப்படி மாலை 6:45 மணிக்கு தொடங்கும். மேலும் இந்தியாவில் சில ஸ்டேடியங்களில் ரூ. 100 முதல் மற்றும் இலங்கையில் ரூ. 300 வரை விலை தொடங்குகிறது” என்று தெரிவித்துள்ளது.

ALSO READ: ஐபிஎல் 2026 ஏல பட்டியலில் திடீர் மாற்றம்.. புது ட்விஸ்ட் கொடுத்த பிசிசிஐ!

2026 டி20 உலகக் கோப்பை டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு செய்வது?

  • கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை இணையத்தளத்திற்கு (https://tickets.cricketworldcup.com ) சென்று வாங்கலாம்.
  • அப்படி இல்லையென்றால் BookMyShow வலைத்தளம் அல்லது ஆப் மூலம் நேரடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்திற்குச் சென்றதும், அனைத்து கிரிக்கெட் அணிகளுக்கான கொடிகள் தெரியும். அதன்படி, நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பும் அணியின் மீது கிளிக் செய்து பதிவு செய்யலாம்.

உதாரணத்திற்கு இந்தியாவின் பெயரைக் கிளிக் செய்தால், இந்திய அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணை தோன்றும். நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பும் போட்டியின் மீது கிளிக் செய்யவும். 2026 பிப்ரவரி 15 ம் தேதி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்தியா vs. பாகிஸ்தான் போட்டியாக இருந்தால், அதன் மீது கிளிக் செய்யவும். அதன் பிறகு “இப்போதே முன்பதிவு செய்” என்பதை கிளிக் செய்து, உங்கள் இருக்கையைத் தேர்ந்தெடுத்து, டிக்கெட் விலையைச் செலுத்தி, உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். ஒரு உள்நுழைவு ஐடியைப் பயன்படுத்தி அதிகபட்சம் இரண்டு டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ALSO READ: குறையும் ரோஹித் – விராட்டின் சம்பளம்..? கில்லுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிசிசிஐ முக்கிய முடிவு!

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் டிக்கெட்டுகள்:

இந்தியா vs. பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 15 அன்று இலங்கையில் நடைபெறும். இலங்கையில் போட்டிகளுக்கான மலிவான டிக்கெட் விலை இலங்கையின் மதிப்பில் 1500 ஆகும். இது இந்திய மதிப்பில் ரூ.438க்கு சமம்.

நோயால் பாதிக்கப்பட்ட எறும்புகளின் ஆச்சரியமூட்டும் செயல்.. விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு..
ஒரு மணி நேர கணவர் சேவை.... ஆண்கள் பற்றாக்குறையால் தவிக்கும் பெண்கள் - எங்கு தெரியுமா?
19,000 டாலர் மதிப்புள்ள முட்டைகளை முழுங்கிய நபர்.. நியுசிலாந்தில் நடந்த பரபரப்பு சம்பவம்..
நானும் வீட்டுக்கு போகனும்... மன்னிப்புக்கேட்ட இண்டிகோ பைலட்