Hardik Pandya New Look: ஆசியக் கோப்பைக்காக மாஸ் லுக்.. புது ஹேர் ஸ்டைலில் உலா வரும் ஹர்திக் பாண்ட்யா!
Hardik Pandya's New Hairstyle: 2025 ஆசிய கோப்பைக்கான பயிற்சிக்காக துபாயில் உள்ள ஹர்திக் பாண்ட்யா, புதிய ஸ்பைக் கட் ஹேர் ஸ்டைலுடன் அனைவரையும் கவர்ந்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியின் போது, அவரது புதிய தோற்றம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஹர்திக் பாண்ட்யா
2025 ஆசிய கோப்பையில் (2025 Asia Cup) பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) துபாய்க்கு சென்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று அதாவது 2025 செப்டம்பர் 5ம் தேதி இந்திய வீரர்கள் ஐசிசி அகாடமியில் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அதில், இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சி மேற்கொண்டப்போது, ஒரு வீரரின் ஹேர் ஸ்டைல் மட்டும் வித்தியாசமாகவும், அனைவரையும் கவர்ந்தது. அவர் வேறு யாருமல்ல ஹர்திக் பாண்ட்யாதான். கடந்த 2025 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) குட்டையான, கருப்பு முடி ஸ்டைலை வைத்திருந்தார். ஆனால் இப்போது அவருக்கு ஸ்பைக் கட் செய்யப்பட்டுள்ளது. அதில் பக்கவாட்டில் உள்ள முடி குட்டையாகவும், பின்புறத்தில் நீண்ட முடியும் விடப்பட்டு, சற்று மங்கிய பொன்னிறத்தில் கலர் அடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான புதிய தோற்றத்தின் படங்களை ஹர்திக் பாண்ட்யா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
ALSO READ: ஆசிய கோப்பை அணியில் இடம் பெற்ற வீரருக்கு டெங்கு.. வேறு வீரர் மாற்ற வாய்ப்பா?
ஹர்திக் பாண்ட்யா நியூ லுக்:
ஹர்திக் பாண்ட்யா இன்ஸ்டாகிராமில் 5 புதிய படங்களைப் பகிர்ந்து, அதன் கீழ் “எனது புதிய அவதாரம்” என்று தலைப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தொடர்பான கமெண்ட் பாக்ஸில் அவரது மூத்த சகோதரர் குருணால் பாண்ட்யாவும் ஹர்திக் பாண்ட்யாவின் இந்தப் புதிய தோற்றத்தில் ஒரு தீ எமோஜியை வெளியிட்டுள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா கடந்த 2025 செப்டம்பர் 4ம் தேதி துபாய்க்கு சென்று நேற்று அதாவது 2025 செப்டம்பர் 5ம் தேதி முதல் முறையாக பயிற்சியில் ஈடுபட்டார். ஹர்திக் பாண்டியா தனது தலைமுடியின் நிறத்தை கருப்பு நிறத்தில் வைத்திருக்காமல் இருப்பது இது இரண்டாவது முறை. முன்னதாக, கடந்த 2018ம் ஆண்டு ஹர்திக் தனது தலைமுடிக்கு நீல நிற சாயம் பூசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பையில் ஹர்திக் பாண்ட்யாவின் சாதனை
ஆசிய கோப்பையில் இதுவரை ஹர்திக் பாண்ட்யா மொத்தம் 14 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், ஒருநாள் வடிவத்தில் 6 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடி மொத்தம் 92 ரன்கள் எடுத்துள்ளார். அதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 87 ஆகும். மேலும், பந்துவீச்சிலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டி20 ஆசிய கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி 83 ரன்களுடன் 17 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
ALSO READ: இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் விலை உயர்வு – ஒரு போட்டிக்கு இத்தனை கோடியா?
சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யாவின் செயல்திறன்:
ஹர்திக் பாண்ட்யா இந்தியாவுக்காக இதுவரை 114 டி20 போட்டிகளில் விளையாடி, 5 அரைசதங்களுடன் 1812 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், பந்துவீச்சில் 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல், 94 ஒருநாள் போட்டிகளில் 11 அரைசதங்களுடன் 1904 ரன்களுடன் 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்களுடன் 532 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.