Hardik Pandya: காரை கழுவும்போது காதலியின் முத்தம்.. வைரலாகும் ஹர்திக்- மஹிகா ரொமான்ஸ் வீடியோ!
Hardik-Mahieka Romantic Video: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் மஹிகா சர்மாவின் இந்த வீடியோவை பயனர்கள் பாராட்டி வருகின்றனர். கடந்த 2025 அக்டோபர் மாதம் ஹர்திக் பாண்ட்யா - மஹிகா சர்மாவுடனான தனது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஹர்திக் பாண்ட்யா - மஹிகா சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) காயம் காரணமாக சமீபகாலமாக இந்திய அணிக்காக விளையாடவில்லை. இருப்பினும், ஹர்திக் பாண்ட்யா தற்போது தனது காதலி மஹிகா சர்மாவுடன் நேரத்தை செலவிட்டு வருவதற்காக புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக, ஹர்திக் பாண்ட்யா தனது பிறந்தநாளில் மஹிகா சர்மாவுடன் (Mahieka Sharma) ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தாங்கள் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்தநிலையில், ஹர்திக் பாண்ட்யாவும், மஹிகா சர்மாவும் ஒன்றாக இணைந்து கார் கழுவிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. காரை கழுவும்போது, மஹிகா சர்மா ஹர்திக் பாண்ட்யா கன்னத்தில் முத்தமிட்டதுதான் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
ALSO READ: இந்தியாவிற்கு எதிரான சைகை.. ஹாரிஸ் ரவூஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!
மஹிகாவுடன் தனது காரை கழுவிய ஹர்திக் பாண்ட்யா:
சமீபத்தில் ஹர்திக் பாண்ட்யா தனது காதலி மஹிகாவுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், இருவரும் சேர்ந்து காரை ஒன்றாக கழுவுவதையும், ஹர்திக் பாண்ட்யா காரை துணியால் சுத்தம் செய்யும்போது, மஹிகா சர்மா தண்ணீரை ஊற்றி கழுவினார். இதன்போது, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு தருணமும் அரங்கேறியது. அதாவது, மஹிகா சர்மா ஹர்திக் பாண்ட்யாவின் கன்னத்தில் அன்பாக முத்தமிட்டார். இது இருவருக்கும் இடையிலான காதல் தருணத்தை அழகாக காட்டியது.
ALSO READ: 82 சதங்கள்.. 144 அரைசதங்கள்.. சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் ரன் வேட்டை!
ஒன்றாக முக்கிய நாட்களை கொண்டாடும் மஹிகா – ஹர்திக்:
ஹர்திக் பாண்ட்யா மற்றும் மஹிகா சர்மாவின் இந்த வீடியோவை பயனர்கள் பாராட்டி வருகின்றனர். கடந்த 2025 அக்டோபர் மாதம் ஹர்திக் பாண்ட்யா – மஹிகா சர்மாவுடனான தனது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கிரிக்கெட் வீரர் தனது மாடல் காதலியுடன் சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டு தங்கள் காதலை உறுதிப்படுத்தினார். மேலும், ஹர்திக் பாண்ட்யா இந்த 2025 ஆண்டு மஹிகாவுடன் தனது பிறந்தநாளையும் கொண்டாடினார், அதன் வீடியோ காட்சியை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். அதன்பிறகு தீபாவளி உட்பட பல்வேறு நல்ல நாட்களிலும் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டுள்ளனர்.