Virat Kohli Birthday: 82 சதங்கள்.. 144 அரைசதங்கள்.. சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் ரன் வேட்டை!
Happy Birthday Virat Kohli: இந்திய அணிக்காக 3 வடிவங்களிலும் விளையாடி வந்த விராட் கோலி, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இவர் ஏற்கனவே, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துவிட்டார். இன்னும் இந்திய அணிக்காக எத்தனை ஆண்டுகாலம் விளையாடுவார் என்பது தெரியவில்லை.
இந்திய அணியின் (Indian Cricket Team) நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி (Virat Kohli) இன்று அதாவது 2025 நவம்பர் 5ம் தேதி தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் விராட் கோலியை கொண்டாடி வருகின்றனர். விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 500க்கு மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி 82 சதங்களை அடித்துள்ளார். இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
ALSO READ: சீரான உடல்நிலை! இந்திய அணிக்கு திரும்புவது எப்போது? அப்டேட் கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர்!




சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்கள்:
5⃣5⃣3⃣ int’l matches 🙌
2⃣7⃣6⃣7⃣3⃣ int’l runs 👏
8⃣2⃣ int’l hundreds 🫡Winner of ICC Men’s ODI World Cup 2011, ICC Champions Trophy 2013 & 2025 and ICC Men’s T20 World Cup 2024 🏆
Here’s wishing #TeamIndia great and former captain @imVkohli a very happy birthday 🎂 👏 pic.twitter.com/UTCnyYrV19
— BCCI (@BCCI) November 5, 2025
விராட் கோலி இதுவரை இந்திய அணிக்காக 553 சர்வதேச போட்டிகளில் விளையாடி 82 சதங்கள் மற்றும் 144 அரைசதங்களுடன் 27,673 ரன்கள் அடித்துள்ளார்.
- 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 30 சதங்கள் மற்றும் 31 அரைசதங்களுடன் 46.85 சராசரியில் 9,230 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ரன்கள் ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் எடுத்தது ஆகும்.
- விராட் கோலி 305 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 51 சதங்கள் மற்றும் 75 அரைசதங்கள் உட்பட 14,255 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவரது சிறந்த ஸ்கோர் 183 ஆகும்.
- விராட் கோலி 125 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 38 அரைசதங்களுடன் 48.69 சராசரியில் ,188 ரன்கள் எடுத்துள்ளார். டி20 சர்வதேச போட்டிகளில் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 122 நாட் அவுட் ஆகும்.
- விராட் கோலி தனது சர்வதேச வாழ்க்கையில் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார். 2011 ஐசிசி ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2024 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணிகளின் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.
ALSO READ: 2026ல் இந்திய கிரிக்கெட் அணி எப்போது யாருடன் விளையாடுகிறது..? முழு அட்டவணை இதோ!
ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடும் கோலி:
இந்திய அணிக்காக 3 வடிவங்களிலும் விளையாடி வந்த விராட் கோலி, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இவர் ஏற்கனவே, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துவிட்டார். விராட் தனது கடைசி டெஸ்ட் தொடரை ஜனவரி 2025 இல் ஆஸ்திரேலியாவில் விளையாடினார். மேலும் இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு, மே 12, 2025 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 2024ம் ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றபோது, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்தார்.