Azharuddin Bungalow Robbery: ஆள் இல்லாத நேரத்தில் திருட்டு.. முன்னாள் கிரிக்கெட்டர் அசாருதீன் வீட்டில் கைவரிசை..!
Mohammad Azharuddin Lonavala Bungalow Burglary: முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதீனின் லோனாவாலா பங்களாவில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. ஜூலை 7 முதல் 18 வரை நடந்த இந்த கொள்ளையில் ரூ. 57,000 ரொக்கம் மற்றும் ஒரு டிவி திருடப்பட்டுள்ளதாக அசாருதீனின் நண்பர் முஜீப் கான் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது அசாருதீனின் (Mohammad Azharuddin) மனைவி சங்கீதா பிஜ்லானிக்கு (Sangeeta Bijlani) சொந்தமான லோனாவாலா பங்களாவில் (Lonavala Bungalow) கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவமானது கடந்த 2025 ஜூலை 7ம் தேதி முதல் 2025 ஜூலை 18ம் தேதி வரை நடந்ததாக புனே கிராமப்புற காவல்துறை அதிகாரிகள் இன்று அதாவது 2025 ஜூலை 19ம் தேதி தெரிவித்தனர். அடையாளம் தெரியாத நபர்கள் காம்பவுன் சுவரில் கம்பியை வெட்டி பங்களாவுக்குள் நுழைந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருட்டு நடந்தது எப்படி..?
புனே கிராமப்புற காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “பங்களாவின் பின்புற சுவரில் உள்ள கிரில்லை வெட்டி, பின்னர் மர்மநபர்கள் பங்களாவிற்கு நுழைந்துள்ளனர். அதன்பிறகு, முதலில் முதல் மாடியின் கேலரியில் ஏறி, பின்னர் ஜன்னலின் கிரில்லை வலுக்கட்டாயமாக உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது, வீட்டிற்குள் சென்ற மர்ம நபர்கள் 50 ஆயிரம் ரூயாப் ரொக்கம் மற்றும் சுமார் 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு டிவியை திருடி சென்றுள்ளனர். அதன்படி, ஒட்டுமொத்தமாக பங்களாவிற்குள் நுழைந்த திருடர்ர்கள் சுமார் 57 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை எடுத்து சென்றுள்ளனர். இதுமட்டுமின்றி, வீட்டினுள் இருந்த ஒரு சில பொருட்களையும் மர்ம நபர்கள் அடித்து உடைத்து சிதறடித்து சென்றுள்ளனர்.




ALSO READ: ஆதாரங்களை சமர்பித்த கர்நாடகா அரசு.. ஆர்சிபி அணியை சாடிய உயர்நீதிமன்றம்!
புகார் அளித்த அசாருதீன் நண்பர்:
Cash, valuables stolen in burglary at former cricketer Azharuddin’s Lonavala bungalow
Read @ANI Story l https://t.co/Pcj0WAPJie#MohammadAzharuddin #Theft #Lonavala pic.twitter.com/hL84JYHZqc
— ANI Digital (@ani_digital) July 19, 2025
பங்களாவில் திருட்டு நடந்ததாக அசாருதீனின் நெருங்கிய நண்பர் முகமது முஜீப் கான் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கடந்த 2025 ஜூலை 7 முதல் 18 வரை பங்களாவில் யாரும் இல்லாதபோதும், பங்களா காலியாக இருந்தபோதும் திருட்டு நடந்ததாக முஜீப் கான் தெரிவித்தார். இந்த வழக்கில் புகாரைப் பதிவு செய்த லோனாவாலா கிராமப்புற போலீசார், BNS பிரிவுகள் 331 (3), 331 (4), 305 (A), 324 (4), மற்றும் 324 (5) ஆகியவற்றின் கீழ் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருடப்பட்ட பொருட்கள் இன்னும் மீட்கப்படவில்லை, போலீசார் தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை எடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். இது தவிர, அருகில் வசிக்கும் வீட்டார்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ALSO READ: முடிவுக்கு வந்த பேட்மிண்டன் காதல் கதை.. சாய்னா நேவால் – பருப்பள்ளி காஷ்யப் பிரிவதாக அறிவிப்பு!
முகமது அசாருதீன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் இதுவரை இந்திய அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22 சதங்கள் மற்றும் 21 அரைசதங்கள் உதவியுடன் 45.03 சராசரியில் 6215 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 334 ஒருநாள் போட்டிகளில், அசாருதீன் மொத்தம் 7 சதங்கள் மற்றும் 58 அரைசதங்கள் உதவியுடன் 37 சராசரியில் 9378 ரன்கள் எடுத்துள்ளார்.