IPL 2026 : டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்திய ஐபிஎல் விதி – 1 ரன் வித்தியாசத்தில் தோல்விக்கு காரணம்?
IPL Rule Controversy : ஐபிஎல் 2026 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸிடம் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த போட்டியில் ஒரு விசித்திரமான ஐபிஎல் விதியின் காரணமாக குஜராத் டைட்ன்ஸ்க்கு தோல்வி அடைய நேரிட்டது.

டேவிட் மில்லர்
ஐபிஎல் 2026 சீசனில் போது டெல்லி கேப்பிடல்ஸ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு போட்டியில், அந்த அணி வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இருப்பினும், இந்தத் தோல்வி வீரர்களின் மோசமான செயல்பாடு மட்டும் காரணமில்லை. ஐபிஎல் விதியும் பெரும் பங்கு வகித்தது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூட இந்த குறிப்பிட்ட விதி குறித்து தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இன்னிங்ஸின் 10வது ஓவரில் ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது. நிதிஷ் ராணா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, எல்பிடபுள்யூ கேட்கப்பட்டது. அம்பயரும் உடனடியாக அவுட் கொடுத்தார். இருப்பினும், அந்த இடைப்பட்ட நேரத்தில், நிதிஷ் ராணா ஒரு ரன்னை ஓடி எடுத்திருந்தார்.
இதையும் படிக்க : IPL 2026: காயத்தில் மீண்டு வந்த சுப்மன் கில்.. மீளுமா குஜராத் டைட்டன்ஸ்?
இந்த நிலையில் நிதிஷ் ராணா நடுவரின் முடிவை ரிவியூ செய்யக் கோரினார். அப்போது பந்து உண்மையில் அவரது கிளவுஸில் பட்டிருந்தது தெரியவந்தது. டிஆர்ஸ்க்கு பிறகு அம்பயர் தனது முந்தைய முடிவை மாற்றிக்கொண்டு, நாட் அவுட் என்று அறிவித்தார். சரியாக இந்த இடத்தில்தான் உண்மையான சர்ச்சை தொடங்கியது.
டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்திய ஐபிஎல் விதி
ஐசிசி விதிகளின் படி, ஒரு அம்பயர் அவுட் என கையை உயர்த்தியதுமே அப்போது வீசப்பட்ட பந்து டெட் பால் என கருதப்படும். இதன் காரணமாக, ராணா ஓடி எடுத்த அந்த ஒரு ரன் ஸ்கோர்போர்டில் சேர்க்கப்படவில்லை. அந்த ஒரு ரன் கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தால், போட்டி டிராவில் முடிந்திருக்கும். இல்லை என்றால் டெல்லி அணி வெற்றி பெற்றிருக்கும். இந்த விதியைத் திருத்த வேண்டும் என்று நீண்ட காலமாகத் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தபோதிலும், ஐபிஎள் நிர்வாகக் குழு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியது, இப்போது டெல்லி அணிக்குப் பெரும் சாபமாகவே அமைந்துவிட்டது.
இதையும் படிக்க : IPL 2026: தாமதமாகும் எம்.எஸ்.தோனி வருகை.. ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி!
மேலும், கடைசி ஓவரில் டேவிட் மில்லர் எடுத்த ஒரு முடிவும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. வெற்றியை உறுதி செய்ய கடைசி ஓவரில் டெல்லி அணிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன. அந்த நேரத்தில் மில்லர் ஏற்கனவே மிகச் சிறந்த ஃபார்மில் இருந்தார். கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு வெறும் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், பிரசித் கிருஷ்ணா வீசிய 5வது பந்தை மில்லர் எதிர்கொண்டார். ஆனால், அந்த பந்தில் அவர் ரன் எடுக்க மறுத்துவிட்டார். கடைசி பந்தில் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் அடித்துக்கொள்ளலாம் என அவர் ஸ்டிரைக்கை தக்க வைத்துக்கொண்டார். அவர் அந்த ஒரு ரன்னை மட்டும் எளிதாக எடுத்திருந்தால், இரு அணிகளின் ஸ்கோரும் சமமாகியிருக்கும். போட்டியும் சூப்பர் ஓவருக்கு சென்றிருக்கும்.