IPL 2026: சென்னை சூப்பர் கிங்ஸூக்கு பின்னடைவு.. முக்கிய பந்துவீச்சாளர் காயத்தால் விலகல்..!

Nathan Ellis Ruled Out: ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லிஸ், தனது 186 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 231 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 36 சர்வதேச டி20 போட்டிகளில் 55 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்த புள்ளிவிவரங்கள் எல்லிஸின் விக்கெட் வீழ்த்தும் திறனைத் தெளிவாகக் காட்டுகின்றன.

IPL 2026: சென்னை சூப்பர் கிங்ஸூக்கு பின்னடைவு.. முக்கிய பந்துவீச்சாளர் காயத்தால் விலகல்..!

நாதன் எல்லிஸ்

Published: 

19 Mar 2026 19:29 PM

 IST

ஐபிஎல் 2026 தொடர் (IPL 2026) தொடங்குவதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ், காயம் காரணமாக இந்தத் தொடர் முழுவதிலிருந்தும் விலகியுள்ளார். இதையடுத்து, நாதன் எல்லிஸூக்கு பதிலாக வேறு யாரை நியமிப்பார் என்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) இன்னும் அறிவிக்கவில்லை. ஸ்போர்ட்ஸ்டார் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, தொடைத்தசைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நாதன் எல்லிஸ் இந்தத் தொடர் முழுவதிலிருந்தும் விலகியதாக கூறப்படுகிறது.

நாதன் எல்லிஸின் விலகல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாகும். ஏனெனில் எல்லிஸ் சென்னை அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாகக் கருதப்பட்டார். ஸ்போர்ட்ஸ்டார் பத்திரிகையின் அறிக்கையின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவருக்குப் பதிலாக ஒரு மாற்று வீரரைத் தேடி வருகிறது. எல்லிஸின் இல்லாதது, ஆடும் லெவனில் நிரந்தர இடத்தைப் பிடிப்பதற்கான மேட் ஹென்றிக்கு வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.

ALSO READ: இம்பேக்ட் வீரராக களமிறங்குகிறாரா ரோஹித் சர்மா? மும்பை பயிற்சியாளர் விளக்கம்!

நாதன் எல்லிஸின் கிரிக்கெட் வாழ்க்கை:

ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லிஸ், தனது 186 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 231 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 36 சர்வதேச டி20 போட்டிகளில் 55 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்த புள்ளிவிவரங்கள் எல்லிஸின் விக்கெட் வீழ்த்தும் திறனைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஐபிஎல் 2026 தொடரிலிருந்து நாதன் எல்லிஸ் விலகியிருப்பது, 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு நிச்சயம் பின்னடைவாகும்.

சிஎஸ்கே-வின் வேகப்பந்து வீச்சு வரிசை எப்படி..?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு வரிசையில் மேட் ஹென்றி, குர்ஜப்நீத் சிங், முகேஷ் சௌத்ரி மற்றும் கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதுமட்டுமின்றி சிவம் துபே, ஜாக்ஸ் ஃபௌல்க்ஸ், அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகிய மிதவேக பந்துவீச்சாளர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ALSO READ: பாட் கம்மின்ஸ் டவுட்.. இஷான் கிஷனை கேப்டனாக நியமித்த SRH!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு விவரம்:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, எம்.எஸ்.தோனி, டெவால்ட் ப்ரூவிஸ், உர்வில் பட்டேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஷ்ரேயாஸ் கோபால், ஷ்ரேயாஸ் கோபால், ஷ்ரேயாஸ் கோபால். கார்த்திக் ஷர்மா, பிரசாந்த் வீர், ராகுல் சாஹர், அகேல் ஹொசைன், மாட் ஹென்றி, மேத்யூ ஷார்ட், அமன் கான், சர்ஃபராஸ் கான், ஜாக்கரி ஃபௌல்க்ஸ்

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்