IND vs SA ODI Series: இந்திய அணியில் விளையாட வேண்டுமா..? ரோஹித், கோலிக்கு செக் வைத்த பிசிசிஐ!
Rohit Sharma - Virat Kohli: வருகின்ற 2025 டிசம்பர் 24 முதல் தொடங்கும் உள்நாட்டு ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் பங்கேற்க ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, வருகின்ற 2025 நவம்பர் 30 முதல் தொடங்கும் இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு இந்த நிபந்தனை பொருந்தாது.

ரோஹித் சர்மா - விராட் கோலி
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்து பல நாட்கள் கடந்துவிட்டாலும், இந்தியாவின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மாவின் (Rohit Sharma) எதிர்காலம் குறித்து இன்னும் நிச்சயமற்ற தன்மை உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கோலி மற்றும் ரோஹித் இப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகின்றனர். முன்னதாக, ஓய்வு பெறுவார்கள் என்ற பல ஊகங்களுக்கு மத்தியில், விராட் மற்றும் ரோஹித் இருவரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரில் மீண்டும் வந்தனர். ஆனால் அப்படியிருந்தும், கோலி மற்றும் ரோஹித்தின் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரோஹித் மற்றும் கோலிக்கு ஒரு நிபந்தனையை விதித்துள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடினால் மட்டுமே அவர்கள் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அசத்தல்:
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்ற பிறகு விராட் மற்றும் ரோஹித் தற்போது கிரிக்கெட் களத்திலிருந்து விலகி உள்ளனர். காரணம், சமீபத்தில் இந்திய அணி டி20 தொடரில் விளையாடியது. இப்போது சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஆனால் அதன் பிறகு, அதே இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரிலும் விளையாடும். அதற்கு முன், நட்சத்திர வீரர்களான விராட் மற்றும் ரோஹித் இருவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ நிபந்தனை விதித்துள்ளது.
ALSO READ: ஐசிசி வைத்த செக்! 2028 ஒலிம்பிக்கில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறாதா..?
பிசிசிஐ நிபந்தனை:
BCCI wants senior pros Rohit Sharma & Virat Kohli to prove their match fitness and form in domestic tournaments ahead of the next ODI cycle. pic.twitter.com/xDwdub2kh9
— CricTracker (@Cricketracker) November 12, 2025
வருகின்ற 2025 டிசம்பர் 24 முதல் தொடங்கும் உள்நாட்டு ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் பங்கேற்க ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, வருகின்ற 2025 நவம்பர் 30 முதல் தொடங்கும் இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு இந்த நிபந்தனை பொருந்தாது. இருப்பினும், இந்திய அணியின் அடுத்த ஒருநாள் தொடர் வருகின்ற 2025 ஜனவரி 11, 2026 முதல் நியூசிலாந்திற்கு எதிராக நடக்கவுள்ளது. அந்த தொடருக்கு தேர்வு செய்யப்பட வேண்டுமென்றால் விராட் மற்றும் ரோஹித் இருவரும் இந்த நிபந்தனையை நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால் இந்த இரண்டு வீரர்களும் உள்நாட்டு போட்டியில் பங்கேற்கிறார்களா இல்லையா என்பதைப் பார்ப்பது முக்கியம்.
இருப்பினும், உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட ரோஹித் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தனது இருப்பை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் ஹசாரே டிராபியில் மட்டுமல்லாமல், இந்தத் தொடருக்கு முன்பு நடைபெறும் சையத் முஷ்டாக் அலி டி20 டிராபியிலும் அவர் விளையாடலாம். இந்தப் போட்டி வருகின்ற 2025 வம்பர் 26 முதல் தொடங்கி 2025 டிசம்பர் 18 வரை தொடரும்.
ALSO READ: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே இதுவரை 16 டெஸ்ட் தொடர்.. யார் அதிக ஆதிக்கம்..?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தேர்வுக்கு இந்தப் போட்டியில் விளையாடுவது கட்டாயமாக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மறுபுறம், விராட் கோலி லண்டனில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதால் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.